Advertisment

Ind vs Nz Series 2020: நோ தோனி, நோ சஞ்சு - நியூசிலாந்துக்கு இந்த டீம் போதுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs nz 2020 series indian team announced - இந்தியா vs நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, விராட் கோலி, ரோஹித் ஷர்மா

ind vs nz 2020 series indian team announced - இந்தியா vs நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, விராட் கோலி, ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24-ம் தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

'இதுக்கு பேரு கேட்ச்சா?' அல்லது 'இதுவும் கேட்ச்சா?' - பிக்பேஷ் கேட்ச் இப்போது பஞ்சாயத்து வரை...

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

20 ஓவர் அணியை பொறுத்தவரை, எதிர்வரும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அணித் தேர்வு இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உலகக் கொப்பை தோல்வி குறித்து தோனி இன்று கருத்து தெரிவித்து இருக்கிறார். பேட்டுக்கும், கிரீஸுக்கும் இடையேயான 'அந்த இரண்டு இன்ச் தூரத்தை கடக்க நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இன்றும் எனக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்' என்று பேசியிருக்கிறார். தோனியின் இந்த பேட்டி மூவ், இந்திய அணிக்குள் அவர் மீண்டும் வருவதற்கான சமிக்ஞ்சையா என்று புதிராக உள்ளது. அதேசமயம், இதுவரை மீண்டும் கிரிக்கெட் பயிற்சிக் களத்துக்கு திரும்பாமல் இருக்கும் தோனிக்கு வாய்ப்பளிக்க வாய்ப்பே இல்லை என்ற கருத்தும் வலுவாக உள்ளது.

6,6,6,6,6 - ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு விலை! பிக் பேஷ் அட்ராசிட்டீஸ் (வீடியோ)

அப்படியே வந்தாலும், ஒருநாள் போட்டிகளில் தோனிக்கு சான்ஸ் நஹி.

முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கடந்த 4 மாதங்களாக எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்து தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே இந்திய ஏ அணிக்கு தேர்வாகி இருந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதையொட்டி உடல்தகுதி சோதனை நேற்று நடந்தது. இதில் அவர் முழு உடல்தகுதியுடன் இல்லை என்று தெரிய வந்ததால் இந்திய ஏ அணியில் இருந்து விலக்கப்பட்டார். எனவே அவரது வருகை சந்தேகமே.

டெஸ்ட் அணியை பொறுத்தவரை 3-வது தொடக்க ஆட்டக்காரர் இடம் மட்டுமே காலியாக உள்ளது. பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் லோகேஷ் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். 5-வது வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு பதில் 3வது சுழற்பந்து வீச்சாளர் தேவை என்று தேர்வாளர்கள் கருதினால், குல்தீப் யாதவ் இடம் பிடிப்பார்.

மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம் பெறுவார்கள்.

’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி

இந்திய அணி அறிவிப்பு:

இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (VC), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மீண்டும் தோனி நஹி:

எதிர்பார்த்தது போலவே மீண்டும் தோனி அணியில் இடம்பெறவில்லை. மற்றபடி அதே அணி தான் எந்த மாற்றமும் இல்லை. சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியிருப்பது மட்டுமே சற்று ஷாக்கான செய்தி.

ரிசர்வ் விக்கெட் கீப்பர் என்ற இடத்தில் அவரை தேர்வு செய்திருக்கலாம் என்று நினைத்தாலும், லோகேஷ் ராகுலும் விக்கெட் கீப்பிங் செய்வதால், பிசிசிஐ சஞ்சுவை கன்ஸிடர் செய்யவில்லை. தவிர, கம்பேக் கொடுத்த ஷிகர் தவான், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு அரைசதம் அடித்து தனது இருப்பை உறுதி செய்திருப்பதால், சன்சுவின் இடம் மேலும் ஆட்டம் கண்டது. (தவான் ஒண்ணுமே அடிக்காம போயிருந்தளும் சஞ்சு நீக்கப்பட்டிருப்பார் என்பது வேறு சங்கதி!).

மற்றபடி இது முழுக்க முழுக்க எதிர்பார்த்த டி20 அணி தான்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி பின்னர் அறிவிக்கப்படும்.

India Vs New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment