Advertisment

IND vs AFG: கேப்டனாக ரோகித்; கோலி இல்லை; சஞ்சு-வுக்கு பதில் ஜிதேஷ் - இந்தியா ஆடும் லெவன் இழுபறி!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
India vs Afghanistan 1st T20 Predicted playing 11 in tamil

கடந்த டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி மொத்தம் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 16ல் வெற்றி பெற்றுள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. 

Advertisment

டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் 6 மாதங்களுக்குள், இந்தியா தனது கடைசி டி20 தொடரை விளையாடுகிறது. இந்தியா கடைசியாக, அண்மையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மற்ற 2 போட்டிகளை இரு அணிகளும் தலா ஒன்றை வென்றன. இதனால் தொடர் சமனில் முடிந்தது. 

இதையும் படியுங்கள்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நட்சத்திர வீரர் ரஷீத் கான் திடீர் விலகல்

கடந்த டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி மொத்தம் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 16ல் வெற்றி பெற்றுள்ளனர். அணியில் உள்ள பெரிய மாற்றங்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்புவது பார்க்கப்படுகிறது. இருவரும் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஃபார்மெட்டில் விளையாடி இருந்தார்கள்.

இதையும் படியுங்கள்: முதல் இருதரப்பு தொடர்... இந்தியா vs ஆப்கான் டி20 போட்டியை ஆன்லைனில் லைவ்-வாக பார்ப்பது எப்படி?

இந்தியா ஆடும் லெவன் எப்படி இருக்கும்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் முழுநேர கேப்டன் ரோகித் அணியை வழிநடத்துவார் மற்றும் மூன்று ஆட்டங்களுக்கும் தொடக்க வீரராக இருப்பார். ருதுராஜ் கெய்க்வாட் இல்லாததே ரோகித் அணிக்கு திரும்புவதற்கு காரணம் என பேசப்படுகிறது.

கோலிக்குப் பிறகு, எல்லா நேரத்திலும் இரண்டாவது அதிக டி20 ரன்களை அடித்தவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை 29 அரை சதங்களுடன் ரோகித் டி20-யில் சதங்களை அடித்துள்ளார். இந்தியா யாரை அவரது பார்ட்னராக களத்திற்குள் அனுப்பப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதையும் படியுங்கள்: அவநம்பிக்கை... இஷான் கிஷானுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன்?

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில் ஆகிய இருவரும் இந்த ஃபார்மெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். ஜெய்ஸ்வால் இதுவரை 14 இன்னிங்ஸ்களில் 159 ஸ்டிரைக் ரேட்டில் 430 ரன்களை எடுத்துள்ளார். கில் 365 ரன்களை 150 ஸ்டிரைக் ரேட்டைத் தொட்டுள்ளார். இருவரும் கடந்த ஆண்டு இந்த ஃபார்மெட்டில் தலா ஒரு சதம் அடித்துள்ளனர். கடைசியாக இந்தியா தென் ஆப்பிரிக்காவில் விளையாடி டி20 தொடரில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்கள்  களமாடினர். இப்போது இடதுகை - வலது கை பேட்டிங் பொருத்தம் என்பது ஜெய்ஸ்வாலுக்கு சாதமாக அமைகிறது. அவரும் தன்னை மிகவும் ஆக்ரோஷமான வீரராக வெளிப்படுத்துகிறார். இந்தியாவின் எதிர்கால திட்டத்திற்கும் சரியான வீரராகவும் இருப்பார். 

இதையும் படியுங்கள்: இரட்டை சதம் முதல் முதிர்ச்சியான பேட்டிங் வரை... இஷான் கிஷன் 5 முறை இந்திய அணியில் இடத்தை இழந்த தருணங்கள்!

கோலிக்கு பதில் திலக் 

மொஹாலியில் நடைபெற உள்ள முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டிலிருந்து விலகியுள்ளார் என்றும், ஆனால் இந்தூர் மற்றும் பெங்களூரில் நடைபெறும் கடைசி இரண்டு போட்டிகளுக்கு அவர் இருப்பார் என்பதை உறுதிப்படுத்தினார். இதனால், அவரது இடத்தில் களமாட திலக் வர்மாவுக்கு இது ஒரு இறுதி வாய்ப்பாக இருக்கலாம். 

கடந்த ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான திலக் வர்மா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் வழக்கமான 3வது இடத்தில் களமிறங்கும் வீரராக இருந்தார். இதுவரை 14 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 141 ஸ்டிரைக் ரேட்டில் 310 ரன்களை குவித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை அணிக்கு கோலி திரும்பியதும், அவர் தனது வழக்கமான 3வது இடத்தில் பேட் செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் டி20 உலகக் கோப்பை அணிக்கான மீதமுள்ள பேட்டிங் வரிசையை ஈடுசெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், மொஹாலியில் நடக்கும் இன்றைய ஆட்டம் உண்மையில் திலக்கிற்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். 

இதையும் படியுங்கள்: 'ஆப்கானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலி இல்லை': டிராவிட் தகவல்

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜிதேஷ் சர்மா

டி20 ஃபார்மெட்டில் இந்தியாவின் அடித்து ஆடும் அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இன்னிங்ஸின் கடைசி கட்டங்களில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிடும் பேட்ஸ்மேன்களை கொண்ட லோ-ஆடர் கீப்பர் பேட்டரான ஜிதேஷ் ஷர்மாவிற்கு அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது.

இதுவரை 24 போட்டிகளில் விளையாடிய அனுபமிக்க கீப்பர்-பேட்டரான சஞ்சு சாம்சன் இந்த தொடருக்கான அணியில் இருந்தாலும், டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஜித்தேஷுக்கு அணி நிர்வாகம் நீண்ட ஓட்டத்தை வழக்க உள்ளது. இதனால், சஞ்சு இன்றைய ஆட்டத்தில் இடம் பெறும் வாய்ப்பு குறைவு தான். 

இந்தியாவின் உத்தே ஆடும் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Afghanistan, 1st T20 playing XI tip off: Rohit Sharma returns to lead, no Virat Kohli, Jitesh over Samson as keeper

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment