/tamil-ie/media/media_files/uploads/2019/01/a315.jpg)
IPL 2019: 12th season will start on march 23rd at India - ஐபிஎல் 2019: மார்ச் 23ல் தொடங்குகிறது 12வது ஐபிஎல் சீசன்! தொடர் முழுவதும் இந்தியாவில்
12வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது என்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க - IPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர்ஸ்! பிளேயிங் லெவனில் ஆடப் போவது யார்?
இந்தாண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் 12வது சீசனை எங்கு நடத்துவது என்ற பெரும் குழப்பம் நிலவியது. தென்னப்பிரிக்காவிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலேயோ ஐபிஎல் தொடரை நடத்தலாம் அல்லது பாதி தொடரை இந்தியாவிலும், பாதியை வெளிநாட்டிலும் நடத்தலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 23ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
'Caravan Format' என்று அழைக்கப்படும் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. வழக்கமாக, போட்டியில் மோதும் இரு அணிகளின் ஏதாவது ஒன்றின் உள்ளூரில் தான் ஆட்டம் நடைபெறும். சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகிறது என்றால், போட்டி சென்னையிலோ அல்லது மும்பையிலோ தான் நடைபெறும்.
ஆனால், இந்த கேரவன் முறையில், ஐந்து அல்லது ஆறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நகரங்களில் மட்டுமே அனைத்து அணிகளும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.