IPL 2020: இது போட்டியின் ஆரம்ப நாட்கள் தான், விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கவில்லை. வெல்வதும் தோற்பதும் விளையாட்டில் சாதாரணமான ஒன்று. ஆனால் இந்த சீசனில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட்டை அணுகுவதில் வேறுபாடு இருப்பதாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் 176 என்ற இலக்கை சேஸ் செய்ய, மகேந்திர சிங் தோனியின் ஆட்கள் ஒருபோதும் போட்டியில் இறங்கவில்லை. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தேவைக்கு அருகில் செல்ல போராடினார், முரளி விஜய் அதிக நேரம் போராடினார்.
மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி?
தோனியின் பேட்டிங் நிலை ஒரு தேசிய ஆவேசமாக மாறியது போல் தோன்றியது, ஆனால் அது அவரை பாதிக்கவில்லை. முந்தைய போட்டியைப் போலவே, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் தோனிக்கு முன்பு களமிறங்கினர். கேப்டன் இறுதியாக 6-வது இடத்தில் மிடில் ஆர்டரில் நுழைந்தபோது, 26 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அவற்றில் 76 ரன்கள் தேவைப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பிருத்வி ஷா டெஸ்ட் சதத்துடன் அறிமுகமானார். கடுமையான காயம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருளை உட்கொண்டதற்கான தடை உள்ளிட்ட விஷயங்களை பதின்ம வயதிலேயே இந்த இளைஞர் சந்தித்தார். அவரது விளையாட்டு நடை மும்பையைச் சேர்ந்த மற்றொரு குறுகிய கால பேட்ஸ்மேனுடன் ஒத்துப் போகிறது. புல் ஷாட்டில் அவ்வப்போது ஷா சிக்கிக் கொள்கிறார். நேற்றும் அப்படித்தான். ஆனால் இடையில் சில மகிழ்ச்சிகரமான காட்சிகளை விளையாடினார், குறிப்பாக ஆஃப்-சைட்.
பெரும்பாலான அணிகள் பவர்ப்ளேயில் ரன்களை அதிகரிக்க முயற்சிக்கின்றன. ஆனால் டெல்லி கேப்பிடஸ் 36 ரன்களை மட்டுமே எடுத்தன. ஷா மற்றும் தொடக்க வீரர் ஷிகர் தவான் பவுண்டரிகளை மட்டுமே எதிர்பார்த்தனர். பீல்டிங் கட்டுப்பாடுகள் வந்த பின்னர், அடுத்த நான்கு ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தனர். தொடக்க வீரர்கள் 11 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தனர்.
ஷாவின் உள்ளே-வெளியே லோஃப்ட் ஷாட்கள் சில உண்மையிலேயே கண்களைக் கவர்ந்தன. ரவீந்திர ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் செட்டில் ஆகாமல் இருந்தனர். சாவ்லா இரண்டு விக்கெட்டுகளுடன் மீண்டு வந்தாலும், இடது கை சுழற்பந்து வீச்சாளரின் நான்கு ஓவர்கள் 44 ரன்களுக்கு சென்றன. நடுத்தர ஓவர்களில் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த தனது சுழற்பந்து வீச்சாளர்களை நம்பியிருந்த தோனியின் விளையாட்டுத் திட்டத்தை இது பாதித்தது.
கோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் கமென்ட்: வெடித்த சர்ச்சை
டெல்லி அணியின் இன்னிங்ஸின் முடிவில், 10-15 ரன்கள் குறைவாக இருப்பதாகத் தோன்றியது. இருப்பினும் மொத்தமாக 175 ரன்களை அவர்கள் எடுத்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத சென்னை அணி தோல்வியடைந்தது.
சுருக்கமான ஸ்கோர்: டெல்லி கேப்பிடல்ஸ் 175/3 (பிருத்வி ஷா 64, ரிஷாப் பந்த் 37; பியூஷ் சாவ்லா 2/33)
சூப்பர் கிங்ஸ் 131/7 (டூபிளெசிஸ் 43, ககிசோ ரபாடா 3/26)
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”