ஐபிஎல் 2020 தொடரின் 19-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரை வீழ்த்தியது.
போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து, 196 ரன்கள் குவித்தது. டெல்லி அணியை சமாளிக்க முடியாமல் பெங்களூரு கேப்டன் கோஹ்லி திணறினார். ப்ரித்வி ஷா 42, ஸ்டோய்னிஸ் 26 பந்தில் 53 ரன்கள் குவித்தனர். அடுத்து சேஸிங் செய்த பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா அதிரடி துவக்கமாக இருந்தார். தவான் நிதானமாக ஆடி 32 ரன்கள் சேர்த்தார். ப்ரித்வி ஷா 23 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சிக்ஸ் அடிக்க முயற்சிக்கையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய ரிஷப் பந்ட் அதிரடி ஆட்டம் ஆடி 37 ரன்கள் சேர்த்தார். ஸ்டோய்னிஸ் கடைசி வரை களத்தில் நின்று 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது.
பந்து வீச்சை பொறுத்த வரை பெங்களூர் அணி துவக்கம் முதலே ரன்களை வாரி வழங்கியது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் கட்டுப்பாடாக பந்து வீசினார். சைனி 3 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்தார். சிராஜ் 2, மொயீன் அலி 1, இசுரு 1 ஆகிய விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற பெரிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அதன் துவக்க வீரர்கள் தேவ்தத் மற்றும் ஆரோன் பின்ச்சை 4 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்து ஆடிய டிவில்லியர்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் கேப்டன் கோலி மட்டுமே போராடி 43 ரன்கள் சேர்த்தார்.
ஆடு- புலி ஆட்டம்: இபிஎஸ்- ஓபிஎஸ் பலம்- பலவீனம் என்ன?
ஆனால் மற்ற யாரும் பெரிதாக சோபிக்காததால், அடுதடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழந்து, 137 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. இதன் காரணமாக, 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.