Kochi IPL Auction 2023 in Kerala | ipl auction 2023 timings | IPL Auction 2023 venue | ipl auction 2023 base price | கேரளாவில்கொச்சிஐபிஎல்ஏலம் 2023 | ஐபிஎல்ஏலம் 2023 நேரங்கள் | ஐபிஎல்ஏலம் 2023 இடம் | ஐபிஎல்ஏலம் 2023 அடிப்படைவிலை: 16-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதில் களமாடும் 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
இதையும் படியுங்கள்: ஐ.பி.எல் 2023 மினி ஏலம்: ஆன்லைனில் ‘லைவ்’ பார்ப்பது எப்படி?
ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
ஐ.பி.எல் மினி ஏலம் – தென்னாபிரிக்கா வீரர் ரிலீ ரோசோவை ரூ.4.60 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – இந்திய வீரர் கே.எம்.ஆசிப்பை ரூ.30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி. ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சம்பாவை ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
ஐ.பி.எல் மினி ஏலம் – இந்திய வீரர் முருகன் அஸ்வின்- ஐ ரூ.20 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் -யை ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் -ஐ ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – இந்திய வீரர் மோஹித் ஷர்மாவை ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது குஜராத் அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – நமீபியா வீரர் டேவிட் வைஸ்ஸை ரூ.1 கோடிக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டிலை ரூ.4.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது குஜராத் அணி
ஐ.பி.எல் மினி ஏலம் – முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மருமகன் மயங்க் டாகரை ரூ.1.5 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் மினி ஏலம் – நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை சிஎஸ்கே அணி ரூ.1 கோடிக்கு வாங்கியது
ஐ.பி.எல் மினி ஏலம் – தமிழக வீரரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஜெகதீசனை ரூ.90 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது
ஐ.பி.எல் மினி ஏலம் – மூத்த வீரர் பியூஷ் சாவ்லா ரூ.50 லட்சத்துக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது
ஐ.பி.எல் மினி ஏலம் – மூத்த வீரர் அமித் மிஸ்ராவை ரூ.50 லட்சத்துக்கு லக்னோ அணி ஏலம் எடுத்துள்ளது
ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்ததை கொண்டாடும் ரசிகர்கள் தனக்கு பின் ஸ்டோக்ஸை கேப்டனாக கொண்டுவர தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முகேஷ் குமார் டெல்லி அணியால் 5.50 கோடிக்கு வாங்கப்பட்டர்
குஜராத் அணியால் சிவம் மாவி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டர்.
நிகோலஸ் பூரன் லக்னோ அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 16.25 கோடிக்கு சென்னனை அணி வாங்கியது.
ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 17.50 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ராஜஸ்தான் அணியால் 5.75 கோடிக்கு வாங்கப்பட்டார்
ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்
இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஜோ ரூட் முதல் சுற்றில் விற்கப்படவில்லை.
இந்திய வீரர் ரஹானேவை 50 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது.
இந்திய வீரர் மயங்க் அகர்வாலை ஐதராபாத் அணி 8.25 கோடிக்கு வாங்கியது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு வாங்கப்பட்டார்!
குஜராத் டைட்டன்ஸ் அணி கேன் வில்லியம்சன் 2 கோடிக்கு வாங்கியது
கேரளா மாநிலம் கொச்சியில் ஐபிஎல் 2023 மினி ஏலம் இனிதே தொடங்கியது.
2008: தோனி
2009: பிளிண்டாஃப், பீட்டர்சன்
2010: பண்ட், பொலா ர்ட்
2011: கம்பீர்
2012: ஜடேஜா
2013: மேக்ஸ்வெல்
2014: யுவ்ராஜ் சிங்
2015: யுவ்ராஜ் சிங்
2016: ஷேன் வாட்சன்
2017: ஸ்டோக்ஸ்
2018: ஸ்டோக்ஸ்
2019: உனாட்கட்
2020: கம்மின்ஸ்
2021: கிறிஸ் மோரிஸ்
2022: இஷான் கிஷன
2023: ?
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிய விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிசிசிஐ பிக் பாஷ் லீக்கில் உள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ என்ற விதியை ஐபிஎல் தொடரிலும் சேர்த்துள்ளதாக தெரிவித்தது.
பிளேயிங் லெவனில் ஒரு வீரரை மாற்றும் வசதி: சுவாரசிய விதிமுறையை அறிமுகம் செய்யும் ஐ.பி.எல்
சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்
நாதன் கவுல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பான்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம் , கேன் வில்லியம்சன், ரிலீ ரோசோவ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ்,
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜாசன் ராய், தென்ஆப்பிரிக்காவின் ரோசவ், வெஸ்ட் இண்டீசின் நிகோலஸ் பூரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் உள்ளிட்ட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் இருந்து இவர்களது ஏலத்தொகை ஆரம்பிக்கும். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டும் ஏலப்பட்டியலில் உள்ளார். இவரது தொடக்க விலை ரூ.1 கோடியாகும்.
என்.ஜெகதீசன், முருகன் அஸ்வின் உள்பட16 தமிழக வீரர்களும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இதில் லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட்டில் 277 ரன்கள் குவித்தும், தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசியும் உலக சாதனை படைத்த என். ஜெகதீசனை இழுக்க கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்சில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெகதீசனின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும். இதே போல் பஞ்சாப்பை சேர்ந்த ஆல்-ரவுண்டர் சன்விர் சிங்கை எடுக்கவும் அணிகள் ஆர்வம் காட்டலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஐ.பி.எல்.-ல் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை அதாவது மாற்று வீரரை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதால அதற்கு ஏற்ப 10 அணிகளும் பல்வேறு திட்டமிடலுடன் ஆயத்தமாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்சுக்கு 2 வெளிநாட்டவர் உள்பட 7 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். ரூ.20.45 கோடி கையிருப்பு உள்ளது. ஏலத்தில் செலவிடுவதற்காக அதிகபட்சமாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் ரூ.42¼ கோடியை கையிருப்பாக கொண்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு விலை போய் ஆச்சரியப்படுத்தினார். இன்றைய ஏலத்தில் அந்த தொகையை யாராவது மிஞ்சி சாதனை படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டி20 உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருது பெற்ற சாம் கர்ரன் (இங்கிலாந்து), கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே) மற்றும் இந்தியாவின் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், அண்மையில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அதிரடியாக 3 சதங்கள் நொறுக்கிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா போன்ற வீரர்களுக்கு கடும் கிராக்கியுடன் அதிக விலை போக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத சாம் கர்ரனை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
1. கடந்த ஆண்டு அணிகள் செலவு செய்யக்கூடிய தொகை இந்த ஆண்டு ரூ, 5 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை அணியின் மொத்த தொகையுடன் ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டது.
2. ஒரு அணி வைத்துள்ள மொத்த தொகையில் 75% தொகையை கண்டிப்பாக செலவு செய்ய வேண்டும்.
3. ரைட் டூ மேட்ச் கார்ட் இந்த ஏலத்தில் பயன்படுத்தப்படவில்லை.
4. ஒவ்வொரு அணியிலும் இந்திய வீரர்கள் குறைந்த பட்சம் 17 வீரர்கள் இடம் பெற வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 வீரரகள் தேர்வு செய்யப்படலாம்.
5. எந்த ஒரு வீரரும் முதல் சுற்றில் விற்கப்படவில்லை என்றால் அந்த வீரரை மறுபடியும் ஏலத்தில் கொண்டுவர அணிகள் சொல்லலாம்.
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.