Advertisment

தன் திறமைக்கான உயரத்தை எட்டாமலேயே ஓய்வு அறிவித்த இர்பான் பதான்! (வீடியோ)

2010 காலக்கட்டத்திற்கு பிறகு, இவரது பந்துவீச்சை எதிரணி வீரர்கள் கடுமையாக அடிக்கத் தொடங்கினர். அவ்வப்போது விக்கெட்டுகள் எடுத்து வந்தாலும், இவரை சரமாரியாக விளாசியதால், அணியின் தனது இருப்பிடத்தை இழந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irfan pathan retired from international cricket - தன் திறமைக்கான உயரத்தை எட்டமாலேயே ஓய்வு அறிவித்த இர்பான் பதான்! (வீடியோ)

irfan pathan retired from international cricket - தன் திறமைக்கான உயரத்தை எட்டமாலேயே ஓய்வு அறிவித்த இர்பான் பதான்! (வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜன.4) அறிவித்துள்ளார்.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

இந்திய அணி கண்டுபிடித்த பொக்கிஷங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தவர் இர்பான் பதான். 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் இடம் பிடித்த இர்பான் பதான், தனது அவுட் ஸ்விங் பந்துவீச்சில், முதல் விக்கெட்டாக மேத்யூ ஹெய்டனை கைப்பற்றி கேமராக்களை தன் பக்கம் சிணுங்க வைத்தார்.

தனது எதிர்காலத்தோடு இந்திய அணியின் எதிர்காலம்! ரொமான்ஸ் புகைப்படங்கள்

அதன்பிறகு இர்பான் பதானின் கிராஃப் அபாரமாக எகிறிக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஹாட்ரிக், இந்திய ஆடுகளங்களில் ஸ்விங் ராஜ்ஜியம் என்று தனக்கான பாதையை சிறப்பாக கட்டமைத்துக் கொண்டிருந்தார். பதானின் பந்துவீச்சு பாகிஸ்தானின் தி கிரேட் வாசிம் அக்ரம் பந்துவீச்சைப் போன்றே இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 29 டெஸ்டில் பங்கேற்று 100 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 120 ஒருநாள் போட்டியில் 173 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, 24 டி-20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட் சாய்த்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் (பாகிஸ்தானுக்கு எதிராக) விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தவர்.

கடந்த 2007 இல் நடந்த முதல் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் பதான் இடம் பெற்றிருந்தார். அந்த தொடரின் ஃபைனலில் 4 ஓவர்கள் வீசிய பதான் 16 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

2010 காலக்கட்டத்திற்கு பிறகு, இவரது பந்துவீச்சை எதிரணி வீரர்கள் கடுமையாக அடிக்கத் தொடங்கினர். அவ்வப்போது விக்கெட்டுகள் எடுத்து வந்தாலும், இவரை சரமாரியாக விளாசியதால், அணியின் தனது இருப்பிடத்தை இழந்தார்.

சிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம்! 45 நிமிட போராட்டத்தின் பலன் கைத்தட்டல் (வீடியோ)

பெரிதாக வந்திருக்க வேண்டிய இர்பான் பதான், கடந்த 2012ல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பிறகு, அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு குறைந்தது.

ஒருக்கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திய பதான், வர்ணனையாளராக பணியாற்றத் தொடங்கினார்.

கடந்த தசாப்தத்தில் இந்திய அணியின் ஹீரோக்களில் ஒருவரான பதான், தனக்கான உயரத்தை அடையாமலேயே இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Irfan Pathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment