Steve Smith first single after 45 minutes aus vs nz 3rd test Melbourne cricket video - சிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம்! என்னாச்சு ஸ்மித்? (வீடியோ)
சர்வதேச கிரிக்கெட்டில் பல சாகசங்கள் புரிந்த வீரர்கள் சில நேரங்களில் காமெடி பீஸ் ஆகும் அளவுக்கு தடுமாறுவதை நாம் பார்த்திருப்போம். அவர்களின் வழக்கமான ஆட்டம் டோட்டலாக அன்று மலையேறி இருக்கும்.
Advertisment
நம்ம யுவராஜ் சிங் 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தடவுன தடவலை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியுமா...!? இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 21 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்ததும், ரசிகர்கள் அவரை நோக்கி 'அவுட்டாகி வெளியே செல்லுங்கள்' என்று கோஷமிட்டதும் நினைவிருக்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (ஜன.3) தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸி., அணியில் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித், தனது முதல் ரன்னை எடுக்க மிகக் கடுமையாக திணறினார். நியூசிலாந்தின் 'வர்லாம் வா' பந்துவீச்சில் ஏகத்துக்கும் திணறிய ஸ்மித், சரியாக 45 நிமிடங்களை களத்தில் கழித்து முதல் ரன்னை எடுத்தார். இதற்காக அவர் சந்தித்த பந்துகள் 39.
அந்த 39 பந்துகளையும் நேர்த்தியாக சந்தித்து டொக்கு வைத்திருந்தால் பிரச்சனை இல்லை. மாறாக, தனது ரிதமை கண்டறிய முடியாமல் அவர் திணறிக் கொண்டிருந்ததை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
அவர் முதல் ரன்னை போராடி எடுத்த பிறகு, அரங்கமே அவருக்கு கைத் தட்டி உற்சாகம் கொடுத்தது. அவருக்கு அப்போது பந்து வீசிய வேக்னரே, சிரித்துக் கொண்டு ஸ்மித்துக்கு தட்டிக் கொடுத்து சிங்கிள் ரன்னுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
எனினும், நிலைத்து நின்று ஆடிய ஸ்மித், 182 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆஸி., முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்திருந்தது.