/tamil-ie/media/media_files/uploads/2020/06/a172.jpg)
ishant sharma, darren sammy, ishant sharma instagram post, ishant sharma racism, ishant sharma darren sammy instagram, ishant sharma sammy kaluu, இஷாந்த் ஷர்மா, டேரன் சமி, கிரிக்கெட் செய்திகள், darren sammy kaluu, ishant sharma insta post, ipl racism, cricket news, sports news
அமெரிக்காவில் போலீஸ் பிடியில் இருந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீர்ர் டேரன் சமி, தானும் நிறவெறிக்கு ஆளானதாக புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய போது, தன்னையும் இலங்கை வீரர் திசர பெரேராவையும் ‘kaluu' என்ற இழிசொல்லால் அழைத்ததாக டேரன் சமி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஃப்ரீ நாடான நியூசிலாந்து! - ஜேம்ஸ் நீஷம் கண்டுபிடித்த 3 காரணங்கள்
எரிகின்ற விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல், சமி கூறுவதை ஊர்ஜிதமாக்கும் வகையில், இஷாந்த் ஷர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது சர்ச்சையாகியுள்ளது.
data-instgrm-version="12">View this post on InstagramMe, bhuvi, kaluu and gun sunrisers
A post shared by Ishant Sharma (@ishant.sharma29) on
Me, bhuvi, kaluu and gun sunrisers A post shared by Ishant Sharma (@ishant.sharma29) on
A post shared by Ishant Sharma (@ishant.sharma29) on
2014-ல் பதிவிடப்பட்ட இஷாந்தின் அந்த இன்ஸ்டா பதிவில் "நான், புவி, கலூ, மற்றும் கன் ரைசர்ஸ்" என்று இஷாந்த் சர்மா தங்களை அடையாளப்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், டேரன் சமி நிற்க, அவரை அடையாளப்படுத்தும் விதமாக kaluu என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சமி இன்ஸ்டாகிராம் வீடியோவில் கொந்தளித்துள்ள நிலையில் நெட்டிசன்கள் இஷாந்த் ஷர்மாவை சமியிடம் சிக்க வைத்துள்ளனர்.
மர்மம்... மார்க்கெட்டிங்... மகேந்திர சிங் தோனி - ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்
டேரன் சமியின் குற்றச்சாட்டு குறித்து இர்பான் பதான் ஏ.என்.ஐ. நிறுவனத்திடம் கூறும்போது, "அப்படி ஏதாவது நடந்திருந்தால் அது எங்கள் பார்வைக்குக் கொண்டுவரப் பட்டிருக்கும் எனவே அப்போது இது தொடர்பாக எந்த விவாதமும் எழவில்லை” என்றார்.
சமி, இஷாந்த், புவனேஷ், ஸ்டெய்ன் நால்வரும் ஹைதராபாத் அணிக்காக ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.