இன்றைய பச்சா ஃபாஸ்ட் பவுலர்கள் காலத்தில், பேட்ஸ்மேன்கள் எளிதாக பந்துகளை சிதறடித்துக் கொண்டிருக்கும் வேளையில், மரண பயத்தை காட்டிய பவுலர்கள் இருந்த காலத்திலேயே, பேட்டிங்கில் அனாயசம் காட்டிய வீரர்களில் ஒருவர் கபிலதேவ். தவிர, இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைசிறந்த ஆல் ரவுண்டராகவும், இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த முதல் கேப்டனும் இவரே.
அதில், இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவனை கண்டாலே, நான் ஓடி ஒளிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவனை பார்க்கவே நான் நிறைய பயப்படுவேன். முதலில் அவர் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இரண்டாவது அவர் மிகவும் கோபக்காரர். 1979-ல் நான் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, அவர் தான் அணிக்கு கேப்டன். அவர் என்னை பார்க்க முடியாத இடத்தில் நான் எப்போதும் ஒளிந்து கொள்வேன்.
அவர் என்னை எப்போது பார்த்தாலும், கோபமாக பேசுவார். காலை உணவின் போது, நான் தனியாக சென்று அமர்ந்து கொள்வேன். ஏனெனில், நான் எப்போதும் அதிகமாக சாப்பிடுபவன். ஒருவேளை அவர் என்னை பார்த்துவிட்டால், 'என்ன இவன் எப்போது பார்த்தாலும் திண்ணுக் கொண்டே இருக்கிறான்' என்று அவர் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே தனியாக சென்று அமர்ந்துவிடுவேன்" என்றார்.
60 மற்றும் 70களில் இந்தியாவுக்காக விளையாடிய பிரபல ஸ்பின்னரான வெங்கடராகவன், 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1983 ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 156 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil