இங்கிலாந்தில் நேற்று (ஆக.2) ஞாயிற்றுக்கிழமை கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், Lancashire மற்றும் Leicestershire அணிகள் மோதின.
Lancashire அணியின் பேட்ஸ்மேன் ஒருவருக்கு Leicestershire வேகப்பந்து வீச்சாளர் Dieter Klein பந்து வீசினார். அதை பேட்ஸ்மேன் ஸ்ட்ரெய்ட் டிரைவ் செய்ய, பந்து Klein கைகளில் பெரிய அலட்டலின்றி சிக்கியது.
ஆனால், பந்தை பிடித்த நொடியில், பேட்ஸ்மேனை நோக்கி அவர் மிக வேகமாக வீசி எறிய, பந்து பேட்ஸ்மேனின் காலை பலமாக தாக்கியது.
IPL 2020: இறுதிப் போட்டி தேதி மாற்றம்; 10 Double-Headers ஆட்டங்கள்
இத்தனைக்கும், ரன் ஓட கூட பேட்ஸ்மேன் முயற்சிக்கவில்லை. டிரைவ் செய்துவிட்டு, அவர் துளி கூட அசராமல் கிரீஸில் நிற்க, தேவையின்றி வேண்டுமென்றே (?) தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீசியது போல் இருந்தது அந்த த்ரோ.
வலியில் துடிதுடித்துப் போன பேட்ஸ்மேன், அப்படியே காலை பிடித்தபடியே நகர்ந்து சென்றுவிட்டார்.
ஐசிசி விதிப்படி, இது லெவல் 2 குற்றம் என்பதால், பேட்டிங் செய்த அணிக்கு 5 ரன்கள் வழங்கினார் அம்பயர்.
இந்த வீடியோவை பார்த்தால், உங்களுக்கே தெரியும் பவுலர் எவ்வளவு மூர்க்கத்தனத்துடன் செயல்பட்டார் என்று. ஆனால், இந்த செயலுக்கு தண்டனை வெறும் 5 ரன்கள்.
கோலிவுட்டில் தில்லாக கால் பதித்து சாதித்த டாப் 5 விளையாட்டு வீரர்கள்
அவர் வீசியெறிந்த த்ரோ, பவுலரின் தலையில் பட்டிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அப்போதும் 5 ரன்கள் தான் கொடுப்பார்களா? அல்லது பந்து தாக்கிய கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அதனால் அந்த பேட்ஸ்மேனின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்திருந்தால், அப்போது என்ன செய்வார்கள்?
இதுபோன்ற மிக ஆபத்தான செயல்பாடுகளுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்குவதே, வீரர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil