தொடர்ச்சியான தொடர்களுக்குப் பிறகு ஓய்வின்றி உடனடியாக நியூசிலாந்து மண்ணில் கால் வைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியிலேயே கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
மேலும் படிக்க - இந்தியா வென்றது எப்படி?
இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203-5 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 58, ராகுல் 56 ரன்கள் உதவியுடன் 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து வென்றது.
24, 2020
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நியூசிலாந்து பேட்டிங் செய்கையில் 20வது ஓவரை பும்ரா வீசினார். அதன் முதல் பந்தை எதிர்கொண்ட ராஸ் டெய்லர் டீப் மிட் விக்கெட் பகுதியில் அடித்துவிட்டு ரன் ஓடினார்.
அந்த பந்தை பீல்ட் செய்ய வந்த மனீஷ் பாண்டே, பந்தை எடுக்காமல் தவறவிட்டார். ஆனால், பந்தை எடுத்தது போன்றும், த்ரோ செய்வது போன்றும் செய்கை வெளிப்படுத்தினார். அவர்கள் இரண்டாவது ரன் எடுப்பதை தடுக்கும் வகையில் இவ்வாறு செய்தார்.
ஆனால், கிரிக்கெட் விதிப்படி இது குற்றமாகும். ஒருவேளை அம்பயர் மனீஷ் பாண்டேவின் இந்த செயலை கவனித்திருந்தால் 5 பெனால்டி ரன்கள் கொடுத்திருக்க வாய்ப்பிருந்தது. இரு அம்பயருமே இதை கவனிக்காததால் மனீஷ் பாண்டே தப்பித்தார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சிறுமியின் தலையை தாக்கிய ரஃபேல் நடால் ஷாட் - முத்தம் கொடுத்து மன்னிப்பு (க்யூட் வீடியோ)