When, Where, How to Watch MI vs RCB 2019 Match Live: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் 2019 தொடர், வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் தொடர் ஆரம்பித்த முதல் இரு வாரங்களுக்கு டல் அடிக்கும். ஆனால், சமீப தொடர்களில் சொதப்பிய டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகளின் விஸ்வரூபமும், வீரர்களுக்கு இடையேயான சில ஆரோக்கியமான மோதலும், சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் பரபரப்பை ஒவ்வொரு போட்டியிலும் கடத்திக் கொண்டிருகின்றன.
இன்றைய மும்பை vs பெங்களூரு போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் காண இங்கே க்ளிக் செய்யவும்
இந்நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று நடைபெறும் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேலும் படிக்க - அசல் ஹீரோவான ரசல்! போராடி தோற்றது பஞ்சாப்!
மும்பை தனது முதல் போட்டியில் டெல்லியுடன் அடி வாங்க, பெங்களூரு தனது முதல் போட்டியில் சென்னையிடம் செமத்தியாக வாங்கியது. ஆக, இன்றைய போட்டி யார் முதலில் வெற்றிப் பெறப் போவது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வெற்றி ஒவ்வொரு போட்டியிலும் இதயங்களை மட்டும் வெல்லும் விராட் கோலிக்கா, அல்லது மூன்று முறை கோப்பை வென்ற அணியின் கேப்டன் என்று மார்த்தட்டும் ரோஹித் ஷர்மாவுக்கா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
IPL 2019, RCB vs MI Live Streaming
இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இப்போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம். குறிப்பாக, நமது 'கணிப்பு கண்ணாயிரம்' வழங்கும் மேட்ச் Prediction குறித்தும் அறிய இன்று மாலை 6 மணி முதல் இணைந்திருங்கள் ஐஇ தமிழுடன்...