Advertisment

கணுக்காலில் வலி... சாம்பியன்ஸ் டிராபியில் கம்மின்ஸ் ஆடுவது சந்தேகம்

கம்மின்ஸ் பிப்ரவரி 22 அன்று பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டிக்கு திரும்புவதற்கு தகுதியுடையவரா இல்லையா என்பதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு தெரியாவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Pat Cummins miss ICC Champions Trophy Australia undergoes scans Tamil News

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு கம்மின்ஸின் காயத்தின் தீவிரம் குறித்து உறுதியாக தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி, 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Will Pat Cummins miss ICC Champions Trophy? Australia on edge as captain undergoes scans

இந்த டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தொடரில் இருந்து கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கம்மின்ஸ் தனது குழந்தை பிறந்ததன் காரணமாக இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகினார் எனக் கூறப்பட்டாலும், அவருக்கு  ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவும் அவர் விலகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது கணுக்காலில் அவர் வலியை உணர்ந்துள்ளார். அதற்காக அவர் ஸ்கேன் செய்து கொண்டுள்ளார். 

Advertisment
Advertisement

இதன் காரணமாக, கம்மின்ஸ் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவது சந்தேகம் தான் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கம்மின்ஸின் கணுக்காலில் வலி ஏற்பட்டதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக  கிரிக்கெட்.காம் என்கிற இணைய பக்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு கம்மின்ஸின் காயத்தின் தீவிரம் குறித்து உறுதியாக தெரியவில்லை என்றும், அவர் பிப்ரவரி 22 அன்று பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டிக்கு திரும்புவதற்கு  தகுதியுடையவரா இல்லையா என்பதும் அவர்களுக்கு தெரியாவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  

அதே செய்தியில், ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறியதாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “அந்த ஸ்கேன் எப்போது திரும்பி வரும் என்பதை நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும் மற்றும் அது எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். கொஞ்சம் வேலை இருக்கிறது. வலி எங்குள்ளது என்பது பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்களைப் பெறுவோம்." என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 167 ஓவர்கள் வீசினார். இதுவே அந்தத் தொடரில் ஒரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரால் அதிகமாக வீசப்பட்ட ஓவர்களாக இருந்தது. 

ஆஸ்திரேலியா கடைசியாக 2009 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு பதிப்புகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே பட்டத்தை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Pat Cummins Champions Trophy Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment