பிக்பேஷ் லீக் தொடர் பற்றி தினமும் நாம் பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மேட்ச்சும், த்ரில்லிங் கொடுக்குதோ இல்லையோ, நாம் ஏற்கனவே சொன்னது போன்று அருமையன கன்டென்ட்களை கொடுத்து வருகிறது.
அதிரடி சிக்ஸர்களாகட்டும், அபார கேட்சுகளாகட்டும், ஆர்ப்பாட்டமான ரன் அவுட்டுகளாகட்டும்... ஐபிஎல்-லுக்கு சற்றும் குறைவில்லாமல் சுவாரஸ்யத்துடன் செல்கிறது.
எல்லைக் கோட்டில் இருந்து பவுலிங்; கீப்பரே நம்பாத ரன் அவுட் - இது Big Bashல் மட்டும் சாத்தியம் (வீடியோ)
இத்தொடரில், அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் அணியும், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதிய ஆட்டத்தில், அடிலைட் அணியின் பிலிப் சால்ட் பிடித்த கேட்ச் தான் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
24, 2019
டக்வொர்த் லூயீஸ் விதிப்படி, 4 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய 'இதோ முடிஞ்சுப்போச்சு' சூழலில், பெர்த் வீரர் கேமரன் கிரீன் அடித்த பந்தை, ஸ்ட்ரெய்டில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து பிலிப் கேட்ச் பிடித்த போது, அவரது தலை தரையில் மிக பலமாக மோதியது.
கிரிக்கெட்டின் 'பீஸ்ட்' கேட்ச்! - ஐபிஎல்-ல ஏன் இவருக்கு இவ்ளோ கிராக்கினு இப்போ புரியும் (வீடியோ)
அது உண்மையில் மிக மிக ஆபத்தான கேட்ச்சாக அமைந்திருக்க வேண்டியது. ஆனால், அவர் தலை தரையில் பலமாக மோதியும், எந்த சேதாரமும் இல்லாமல் அவர் கேட்ச்சை வசமாக்கினார்.
அடிலைட்டும் வென்றது.