sachin tendulkar cricket news rashid latif bcci - 'சச்சினுக்காக என் இதயம் எப்போதும் துடிக்கும்' - உருகும் முன்னாள் பாக்., கேப்டன்
சச்சின் டெண்டுல்கர் குறித்த தனது நினைவலைகளை விக்கெட் கீப்பரும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான ரஷித் லத்தீப் யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
அதில், "நான் விக்கெட் கீப்பிங் செய்கையில் பல வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தார்கள். ஆனால் சச்சின் பேட்டிங் செய்ய வரும் போதெல்லாம், அவர் அவுட்டாக வேண்டும் என்று என் இதயம் விரும்பவில்லை. நான் விக்கெட் கீப்பிங் செய்கையில், அவர் பேட் செய்வதைப் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால், அவர் விளையாடுவதை நான் டிவியில் பார்க்கும் போது அப்படி நினைத்ததல்ல; ஆனால் நான் ஸ்டம்புகளுக்குப் பின்னால் நிற்கும்போது அவர் அவுட்டாகக் கூடாது என்று நினைப்பேன்.
"பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங் அல்லது ஜாக் காலிஸ் ஆகியோராக இருந்தாலும், நான் விக்கெட் கீப்பிங் செய்கையில் அவர்களை அவுட்டாகி செல்ல வேண்டும் என விரும்புவேன். டெண்டுல்கரின் நடத்தை தனித்துவமானது. நான் பின்னால் இருந்து ஏதாவது சொன்னாலும், அவர் ஒருபோதும் பதிலளிக்க மாட்டார் அல்லது எதையாவது சொல்ல மாட்டார், அவர் சிரித்துக் கொண்டே இருப்பார்.
“மற்றவர்கள் ஏதாவது பதிலளிப்பார்கள். அவரும் முகமது அசாருதீனும் இப்படிப்பட்டவர்கள். அவர்கள் எதிரணி வீரர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுவார்கள். இதனால்தான் எல்லோரும் டெண்டுல்கரை, குறிப்பாக விக்கெட் கீப்பர்கள் போற்றுகிறார்கள். அவர் ஒரு சதம் அடிப்பார், அவர் பந்து வீச்சாளர்களைத் தாக்குவார், ஆனால் அவர் ஒருபோதும் ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டார். அவரை அவுட் செய்வதற்காக நீங்கள் அவரை ஒரு கீப்பராக தூண்ட முயற்சிப்பீர்கள். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்வினையாற்ற மாட்டார்.
நீங்கள் ஒரு இன்னிங்ஸ் விளையாடுவீர்கள், பிறகு சென்றுவிடுவீர்கள். ஆனால் அவரது நடத்தை அவரை நினைவில் கொள்ளத்தக்க நபராக மாற்றும். எனது கருத்துப்படி, களத்திலேயே சிறந்த நடத்தை கொண்ட வீரர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார், அத்தகைய வீரர்கள் எப்போதும் உங்கள் நினைவுகளில் பொதிந்திருப்பார்கள்" என்று ரஷித் லத்தீப் மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”