கொரேனா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் பாதித்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட். ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வரும் சூழலில், உலகக் கோப்பை டி20 தொடரும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஊரடங்கால் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் வீட்டிலிருந்துபடி உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். இதர வீரர்கள் சிலரும் வீட்டில் இயன்ற வரை பயிற்சி செய்கின்றனர்.
கொரோனா காலத்தில் முடங்கிய ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைத்த சிஎஸ்கே! வீடியோ
இந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ஷர்துல் தாகூர் மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷரதுல் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.
இதுகுறித்து பேசிய ஷரதுல், "ஆம், நேற்று நாங்கள் பயிற்சி மேற்கொண்டோம். 2 மாதங்களுக்கு பிறகு பிறகு மிகவும் அவசியமான, சிறப்பான பயிற்சியாக இது அமைந்தது" என்று பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மைதானத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன. அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட தனித்தனி பந்து கொடுக்கப்பட்டது. பயிற்சிக்காக வந்த வீரர்களின் உடல் வெப்பநிலையும் சரிபார்க்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
23, 2020#TeamIndia pacer Shardul Thakur began practice at his home ground in Palghar along with Mumbai #RanjiTrophy wicketkeeper-batsman Hardik Tamore.
Palghar District Taluka Sports Association started nets on Saturday lockdown was relaxed in green zones.https://t.co/ppGzuP2v5D
— Express Sports (@IExpressSports)
#TeamIndia pacer Shardul Thakur began practice at his home ground in Palghar along with Mumbai #RanjiTrophy wicketkeeper-batsman Hardik Tamore.
— Express Sports (@IExpressSports) May 23, 2020
Palghar District Taluka Sports Association started nets on Saturday lockdown was relaxed in green zones.https://t.co/ppGzuP2v5D
"விளையாட்டு தொடர்பாக பால்கர் மாவட்ட ஆட்சியர் (மாநில அரசு) வழிகாட்டுதல்கள் வழங்கிய பிறகு, பயிற்சியைத் தொடங்குவதே நோக்கமாக இருந்தது" என்று மும்பை கிரிக்கெட் சங்கம், கவுன்சில் உறுப்பினர் அஜிங்க்ய நாயக் கூறினார்.
தூண்டில் போட்டு சுறா பிடிக்கும் பிசிசிஐ - அது நடந்தால் ஐபிஎல் கன்ஃபார்ம்
"பால்கர் மாவட்டத்தில் எங்களது அருமையான வசதி காரணமாக, சமூக மதிப்பீட்டு விதிமுறைகளையும் சுகாதாரத்தையும் கடைபிடிக்கும் அதே வேளையில், எங்கள் மதிப்பிற்குரிய வீரர்களுக்கு மிகவும் தேவையான பயிற்சித் திட்டத்தை நாங்கள் வழங்க முடிந்தது," என்று அவர் கூறினார்.
ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் மைதானங்களில் பயிற்சி பெற மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாகூர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.