Advertisment

இலங்கை அணியை துவம்சம் செய்த ஆப்கான் : 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Sri Lanka vs Afghanistan, 1st Match, Group B - Cricket Score Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், தொடக்க நாளான இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

author-image
WebDesk
New Update
sl vs afg asia cup 2022 live score online Updates in tamil

SL vs AFG Live Cricket Score updates in tamil

Afghanistan vs Sri LankaAsia Cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) முதல் தொடங்கி வருகிற செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர் முதலில் தீவு நாடான இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. பொதுவாக ஒருநாள் ஃபார்மெட்டில் விளையாடப்படும் இத்தொடர், இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கருத்தில் கொண்டு டி 20 ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது.

Advertisment

6 அணிகள் - இந்தியா 7 முறை சாம்பியன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என மொத்தம் 6 அணிகள் களமாடுகின்றன. இந்த அணிகள் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.

இதையும் படியுங்கள்: பாபர் அசாம் vs விராட் கோலி; யார் பெஸ்ட்? அக்ரம் எவ்ளோ நேர்மையா சொல்றார் பாருங்க!

இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இத்தொடரில் சூப்பர் '4' ஆட்டங்கள் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ம் தேதி நடக்கிறது. தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் மைதானங்களில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்: களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், தொடக்க நாளான இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தசன் ஷனக தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசங்கா உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேப்டன் தசன் ஷனக இன்று அளித்துள்ள பேட்டியில், "கடந்த சில மாதங்களாகவே நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். அது எங்களது சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்த உதவும். துபாய் இலங்கை போன்ற ஒரே மாதிரியான சீதோஷண நிலையைக் கொண்டது." என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணியை முகமது நபி வழிநடத்துகிறார். அந்த அணி ரஷித்கான், ஹஸ்ரத்துல்லா ஷசாய், ஜட்ரன் ஆகியோரைத் தான் மலை போல் நம்பியுள்ளது இவர்கள் ஜொலித்தால் தான் இலங்கைக்கு சவால் அளிக்க முடியும். மேலும், அந்த அணி எந்தவொரு அணியையும் சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளது. அணியின் சுழல் மன்னன் ரஷித் கான் வித்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில், ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தை இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என தீவிரம் காட்டுவார்கள். இதனால் இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படியுங்கள்: Ind vs Pak: எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும்?

நேருக்கு நேர்

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை சந்தித்துள்ளன. 2016-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இலங்கை vs ஆப்கானிஸ்தான்: இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

இதையும் படியுங்கள்: IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

இலங்கை அணி:

தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, அசித மெனந்திம், குசல் பெர்னாண்டோ, டினேஸ் பெர்னாண்டோ, அஷேன் பண்டார, பிரவீன் ஜயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன, நுவான் துஷார

ஆப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி (கேப்டன்), சமியுல்லா ஷின்வாரி, ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், நூர் அஹ்மத், ஜசாய், ஃபரீத் அஹ்மத் மாலிக், உஸ்மான் கானி, அஸ்மத்துல்லா உமர்சாய், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

இதையும் படியுங்கள்: இந்த ஓவர்களில் அதிரடி அவசியம்… ஆசியக் கோப்பையில் இந்தியா வியூகம் இதுதான்!

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பந்துவீ்ச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பாசில்ஹாக் 5-வது பந்தில் குஷால் பெராரா (2) மற்றும் 6-வது பந்தில் அசல்கா (0) என இரட்டை செக் வைத்தார்.

அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நிசங்கா நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் இதனால் இலங்கை அணி 5 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்த குணத்திலாக ராஜபக்சே ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்தது

ஸ்கோர் 7.2 ஓவர்களில் 49 ரன்களை எட்டிய போது குணத்திலகா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹசரங்கா 2 ரன்களும், ஷனங்கா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்த நிலையில், சற்று நேரம் தாக்குபிடித்த ராஜபக்சே 29 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆ்ட்டமிழந்தார்.

அதன்பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 15 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் மட்டுமெ எடுத்தது. இதனால் இலங்கை அணி 100 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த கருணரத்கே மதுஷன்கா இருவரும் நிதனமாக விளையாடினர்.

இதனால் இலங்கை அணி 100 ரன்களை கடந்த நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் கருணரத்னே 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்களில் இலங்கை அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கான் அணி தரப்பில் பாசில்ஹக் 3 விக்கெட்டுகளும்.முஜீப் மற்றும் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 106 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணியில், ஹஸ்ரத்துல்லா குர்பாஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி 7-வது ஓவரில் பிரிந்தது. 18 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 40 ரன்கள் குவித்த குர்பாஸ் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த இப்ராஹிம் 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஹஸ்ரத்துல்லா, நஜிப்துல்லா இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். 10.1 ஓவரில் ஆப்கான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹஸ்ரத்துல்லா 28 ரன்களுடனும் நஜிப்துல்லா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை vs ஆப்கானிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்

இலங்கை:

தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க (விக்கெட் கீப்பர்), பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷனா, சாமிக்க கருணாரத்ன, ஜெஃப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ.

ஆப்கானிஸ்தான்:

ஹஸ்ரதுல்லா ஜசாய், நஜிபுல்லா சத்ரான், இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கனி, ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட்), முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், கரீம் ஜனாத், நூர் அகமது

ஆட்டம் தொடங்கும் நேரம்: இரவு 7.30

போட்டிகள் ஒளிபரப்பு நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார்.

இதையும் படியுங்கள்: வீடியோ: ‘ஹக்’ கேட்ட பாக். ரசிகர்; வேலி தாண்டிச் சென்று நிறைவேற்றிய ரோகித் சர்மா!

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Live Cricket Score Asian Games Srilanka Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment