Advertisment

கிரிக்கெட்டில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் பெஸ்ட் வீரர்! பாடம் கத்துக்கணும்

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், வெளிநாடு சென்று வந்ததையே மறைத்து, வெளியிடங்களுக்கு சென்று வந்த பிறகு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
srilankan batsmen kumar sangakkara in self quarantine return from UK

srilankan batsmen kumar sangakkara in self quarantine return from UK

இலங்கை கிரிக்கெட் அணியின் லெஜன்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் குமார் சங்கக்காரா. களத்தில் இவரும், பார்ட்னர் ஜெயவர்தனேவும் இணைந்து பல உலக அணிகளை சம்பவம் செய்திருக்கின்றனர்.

Advertisment

குறிப்பாக இந்தியா....

இந்திய அணி பல போட்டிகளில் சங்கக்காராவின் ஆட்டத்தால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறது. 'அட யார்யா இவன்... அவுட்டாவ மாட்டேங்குறான்'-னு ரசிகர்களை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக வைத்தவர். ஆனால், விக்கெட் கீப்பிங் செய்யும் போது தான், ஒவ்வொரு பந்துக்கு அவுட் கேட்டு அப்பீல் பண்ணிட்டே இருப்பாப்ள... மத்தபடி கிரிக்கெட்டில் தனது ஓய்வு காலம் வரை ஒரு ஜென்ட்டில் மேனாக வலம் வந்தவர் சங்கக்காரா.

பேட்டுல ஸ்ப்ரிங் இருந்துச்சா இல்லையா? - 17 வருடங்கள் கழித்து ரிக்கி பாண்டிங்கை தலை சுற்ற வைத்த ரசிகர்கள்

இந்நிலையில், கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் தான் ஒரு பொறுப்பான மனிதன் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

அதாவது, ஐரோப்பா சென்றிருந்த சங்கக்காரா சமீபத்தில் தான் இலங்கை திரும்பினார். கொரோனா பாதிப்பு காரணமாக, இலங்கை அரசின் உத்தரவின் படி, தன்னை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து சங்கக்காரா கூறுகையில், "எனக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. இருந்தாலும், அரசாங்கத்தின் அறிவுறுத்தலை பின்பற்றும் விதமாக என்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். நான் கடந்த வாரம் லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய போது, இலங்கை அரசின் ஒரு அறிக்கையை பார்த்தேன்.

அதில், மார்ச் 1 முதல் 15ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து போலீஸிடம் தங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்து சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைப் பார்த்ததும், நான் எனது விவரத்தை போலீஸிடம் அளித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

உன் வருகை நம்பிக்கையின் துவக்கமாக இருக்கட்டும் - குட்டி ரெய்னாவினை வரவேற்ற தந்தை!

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், வெளிநாடு சென்று வந்ததையே மறைத்து, வெளியிடங்களுக்கு சென்று வந்த பிறகு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அவரின் அலட்சியத்தால் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று தெரியவில்லை.

பொது மக்களும், கொரோனா குறித்து கவலை இல்லாமல், இன்னமும் விடுமுறை கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.

இதுபோன்ற பொறுப்பற்ற சமூக சூழ்நிலையில், சங்கக்காரா போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது என்பது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kumar Sangakaara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment