எம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவிக்க, 'என்ன நடக்குது இங்க?' மோடுக்கு வந்தனர் ரசிகர்கள்.
சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” உங்களுடன் இணைந்து விளையாடின நேரங்கள் மிகவும் அழகானவை. பெருமிதத்துடன், இந்த பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவை நான் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டு தனது ஓய்வை அறிவித்தார்.
ஆனால், இத்தனை நாள் அமைதியாக இருந்து, தோனி அறிவித்த பிறகு உடனே ஓய்வு அறிவித்தது ஏன் என்று பலரும் கேள்வியெழுப்ப, நட்புக்கு இலக்கணமே இதுதாண்டா என்கிற மோடில் பலரும் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“சார்… அவர்கள் தோனியை கேப்டனாக்க மறுக்கிறார்கள்” – தோனி ‘சீக்ரெட்ஸ்’ பகிர்ந்த ஸ்ரீனிவாசன்
இந்நிலையில், Dainik Jagran-க்கு ரெய்னா அளித்த பிரத்யேக பேட்டியில், சென்னை அடைந்த பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று தனக்குத் தெரியும் என்றும், எனவே அவர் மனரீதியாக தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டு ஒரு விருந்தில் கலந்து கொண்ட தோனி தனது நண்பர்களில் ஒருவரிடம், 2020 டி 20 உலகக் கோப்பைக்கு பிறகு விளையாட மாட்டேன். ஆனால் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடுவேன் என்று கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
தவிடுபொடியான ‘ஒன் மேன் ஷோ’ பாணி; தலை தொங்கிய G.O.A.T.
"சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஓய்வு பெற நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து அதற்கு ஏற்ப மனதை தயார் செய்து வைத்திருந்தோம். தோனியின் ஜெர்சி எண் 7 மற்றும் என்னுடையது 3 - அதை ஒன்றாக இணைத்தால் 73 ஆகும். ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்தது, எனவே இதைவிட சிறந்த நாள் இருந்திருக்க முடியாது” என்று எண்ணி அன்று ஓய்வு அறிவிக்க முடிவு செய்தோம் என ரெய்னா தெரிவித்தார்.
226 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்ட சுரேஷ் ரெயினா 5615 ரன்களை குவித்துள்ளார். இந்தியாவுக்காக 78 டி 20 போட்டிகளில் விளையாடிதன் மூலம் 1605 ரன்களையும் எடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil