/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-09T172142.137.jpg)
Pakistan vs New Zealand {PAK vs NZ } T20 Match T20 World Cup match highlights in tamil
PAK vs NZ T20 world cup Semi final match 2022 Highlights in tamil: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி பந்துவீசியது.
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலன் – டெவோன் கான்வே ஜோடியில் ஃபின் ஆலன் 4 ரன்னில் அவுட் ஆனார். 3 பவுண்டரிகளை விரட்டிய டெவோன் கான்வே 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் அவுட் ஆனார்.
பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக தொடர்ந்து ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணியினர் போராடினர். இந்த நேரத்தில் களத்தில் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் - டேரில் மிட்செல் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார்.
Afridi cleans up!
Iconic moments like this from every game will be available as officially licensed ICC digital collectibles with @0xFanCraze
Visit https://t.co/EaGDgPxhJN today to see if this could be a Crictos of the Game. pic.twitter.com/6SjdCYeE5l— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
எனினும், அவருடன் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Daryl Mitchell brings up his third T20I fifty 👏#T20WorldCup | #NZvPAK | 📝: https://t.co/7EuauryZFX pic.twitter.com/x0lwQK0r1T
— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
தொடர்ந்து 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் - முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி, தொடக்க முதலே அடித்து ஆடினர். இதனால், பவர் பிளே முடிந்தும் நியூசிலாந்து அணியினரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடியில் அரைசதம் விளாசிய கேப்டன் பாபர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Babar Azam steps it up in the big game 👊#T20WorldCup | #NZvPAK | 📝: https://t.co/7EuauryZFX pic.twitter.com/eniwxZJVaB
— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் 36 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 57 (53) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அதிரடி காட்டி வந்த முகமது ஹாரிஸ் 30 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் களத்தில் இருந்த ஷான் மசூத் (3) மற்றும் இப்திகர் அகமது (0) ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால், பாகிஸ்தான் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அணி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் டி 20 உலகக் கோப்பையின் இறுதிபோட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.
Stunning Rizwan does it again! ⭐
Another brilliant knock in a crunch game 👏#T20WorldCup | #NZvPAK | 📝: https://t.co/7Euaurzxvv pic.twitter.com/4Tm865dWXX— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
A sensational performance from Pakistan in the knockout game ⚡#T20WorldCup | #NZvPAK | 📝: https://t.co/7EuauryZFX pic.twitter.com/6XLQ0gt2Rp
— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
நாளை அடிலெய்டில் நடைபெற உள்ள இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையேயான போட்டியில் வெல்லும் அணி, பாகிஸ்தானை இறுதிபோட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ளும்.
WHAT A WIN, PAKISTAN! 🤯
They have reached their third #T20WorldCup final 👏#NZvPAK pic.twitter.com/vY0LNDTAne— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
- 16:59 (IST) 09 Nov 2022நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்திய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- 16:29 (IST) 09 Nov 2022ரிஸ்வான் அரைசதம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது. அந்த அணி சார்பில் களமாடிய முகமது ரிஸ்வான் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
- 16:22 (IST) 09 Nov 2022பாபர் ஆசம் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது. அந்த அணி சார்பில் களமாடிய கேப்டன் பாபர் ஆசம் அரைசதம் விளாசி 53 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- 16:16 (IST) 09 Nov 2022பாபர் ஆசம் அரைசதம்... வலுவான நிலையில் பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது. அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ரிஸ்வான் 43 ரன்னுடனும், பாபர் ஆசம் 50 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- 15:54 (IST) 09 Nov 2022பவர் பிளே முடிவில் பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது. அந்த அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ரிஸ்வான் 28 ரன்னுடனும், பாபர் ஆசம் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- 15:42 (IST) 09 Nov 2022டேரில் மிட்செல் அரைசதம்... பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி தரப்பில் அரைசதம் அடித்த டேரில் மிட்செல் 53 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
- 15:41 (IST) 09 Nov 2022டேரில் மிட்செல் அரைசதம்... பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி தரப்பில் அரைசதம் அடித்த டேரில் மிட்செல் 53 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
- 15:13 (IST) 09 Nov 2022மிட்செல் அரைசதம்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் டேரில் மிட்செல் 32 பந்துகளில் அரைசதம் அடித்து களத்தில் விளையாடி வருகிறார்.
- 14:58 (IST) 09 Nov 2022கேப்டன் வில்லியம்சன் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சார்பில் களத்தில் விளையாடி வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 42 பந்துகளில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி அடித்து 46 ரன்கள் எடுத்த நிலையில், ஷாஹீன் அப்ரிடியின் பந்துவீச்சில் போல்ட்-அவுட் ஆகி வில்லியம்சன் அவுட்டானார்.
- 14:49 (IST) 09 Nov 202215 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்துள்ளது.
கேப்டன் கேன் வில்லியம்சன் 43 ரன்னுடனும், டேரில் மிட்செல் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- 14:25 (IST) 09 Nov 202210 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்களை எடுத்துள்ளது.
கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், டேரில் மிட்செல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- 14:15 (IST) 09 Nov 2022க்ளென் பிலிப்ஸ் அவுட்!
டெவோன் கான்வே-யின் விக்கெட்டுக்குப் பிறகு வந்த க்ளென் பிலிப்ஸ் முகமது நவாஸ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
- 14:14 (IST) 09 Nov 2022பந்துவீச்சில் மிரட்டும் பாகிஸ்தான்; தடுமாறும் நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலன் - டெவோன் கான்வே ஜோடியில் ஃபின் ஆலன் 4 ரன்னில் அவுட் ஆனார். 3 பவுண்டரிகளை விரட்டிய டெவோன் கான்வே 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது பவர் பிளே (6 ஓவர்கள்) முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
- 13:09 (IST) 09 Nov 2022பாகிஸ்தான் பிளேயிங் லெவன்!
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷாஹீன் அப்ரிடி
- 13:08 (IST) 09 Nov 2022நியூசிலாந்து பிளேயிங் லெவன்!
ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
- 13:06 (IST) 09 Nov 2022டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு; பாகிஸ்தான் பந்துவீசும்!
டி20 உலகக் கோப்பையில் சிட்னியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி பந்துவீசும்.
- 12:49 (IST) 09 Nov 2022நியூசிலாந்து vs பாகிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், சோதி, லோக்கி பெர்குசன்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
- 12:43 (IST) 09 Nov 2022PAK vs NZ: நியூஸி.,க்கு பாக்,. கொடுத்த அதிர்ச்சி… 3 உலகக் கோப்பை அரை இறுதியிலும் வீழ்த்தியது எப்படி?
கடந்த 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
- 12:42 (IST) 09 Nov 2022நியூசிலாந்து vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்!
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் டி20 கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 17-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை அரையிறுதியைப் பொறுத்தவரை, நியூசிலாந்து அணி இதுவரை ஒரு போட்டியில் கூட பாகிஸ்தானை வென்றதில்லை. கடந்த 1992, 1999, 2007 ஆகிய மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றது.
- 12:23 (IST) 09 Nov 2022நியூசிலாந்து vs பாகிஸ்தான் - இரு அணிகள் கடந்து வந்த பாதை!
இந்த உலகக் கோப்பை தொடரில் நடந்த சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் மட்டும் தோல்வி கண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்த அணி களமிறங்கிய ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் கைவிடப்பட்டது.
அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி அதன் கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலனாக பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு டி-20 தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த வெற்றி பாகிஸ்தானுக்கு அசாத்திய நம்பிக்கை கொடுத்துள்ளது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு, அந்த கனவை அடைவதற்கான முதற்படி இன்றைய ஆட்டமாகும். மொத்தத்தில், சமபலம் கொண்ட இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
New Zealand and Pakistan meet at the SCG with a spot in the Final up for grabs 💪
— T20 World Cup (@T20WorldCup) November 9, 2022
Which team wins today?t20worldcup | nzvpak pic.twitter.com/V9cHaS4Mk1 - 12:10 (IST) 09 Nov 2022T20 World Cup: 2 அரைஇறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
ஐசிசி விதியின்படி, லீக் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது 5-5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம் என்று இருந்தது. ஆனால், அரையிறுதி போன்ற நாக் அவுட் சுற்றில் அது மாறிவிட்டது.
- 12:10 (IST) 09 Nov 2022T20 World Cup: 2 அரைஇறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
ஐசிசி விதியின்படி, லீக் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது 5-5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம் என்று இருந்தது. ஆனால், அரையிறுதி போன்ற நாக் அவுட் சுற்றில் அது மாறிவிட்டது.
- 12:10 (IST) 09 Nov 2022T20 World Cup: 2 அரைஇறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
ஐசிசி விதியின்படி, லீக் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது 5-5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம் என்று இருந்தது. ஆனால், அரையிறுதி போன்ற நாக் அவுட் சுற்றில் அது மாறிவிட்டது.
- 12:09 (IST) 09 Nov 2022PAK vs ENG: சிட்னி மைதானத்தில் சராசரி ரன்கள்!
இந்த உலகக் கோப்பையில் சிட்னி மைதானத்தில் சராசரி ரன்கள்
முதல் இன்னிங்ஸ்: 178
இரண்டாவது இன்னிங்ஸ்: 116
டாஸ் வென்ற பிறகு என்ன செய்ய வேண்டும் என்று சராசரி ரன்கள் கூறுகிறது. இந்த மைதானத்தில் இந்த உலகக் கோப்பை சேஸிங்கில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து மட்டுமே வென்றுள்ளது.
- 11:54 (IST) 09 Nov 2022நியூசிலாந்து vs பாகிஸ்தான்: சிட்னி ஆடுகளம் எப்படி?
சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் ஆரம்ப கட்டத்தில் பேட்டர்களுக்கு சில உதவிகளை வழங்குகிறது. சுழலுக்கும் நன்கு ஒத்துழைக்கிறது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர், பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் உள்ளனர். எனவே, போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
- 11:51 (IST) 09 Nov 2022IND vs ENG: கோலி, பாண்டியாவை பயமுறுத்தும் வீரர்கள் இவங்க தான்… 3 முக்கிய மேட்ச் -அப்ஸ்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது இன்-ஸ்விங் பந்துகளால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை தொந்தரவு செய்திருக்கிறார்.
- 11:34 (IST) 09 Nov 2022சிட்னி வானிலை முன்னறிவிப்பு!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் சிட்னியில் இன்று புதன்கிழமை வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, கடலோரப் பகுதிகளில் காலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், "ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோரப் பகுதியில் காலையில் லேசான (30%) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசான காற்று பிற்பகலில் கிழக்கிலிருந்து வடகிழக்கு திசையில் மணிக்கு 15 முதல் 25 கி.மீ. வேகத்தில் வீசும், மாலையில் லேசாக மாறும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 11:29 (IST) 09 Nov 2022பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்!
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, மாஸ் ஷா அப்ரிடி . காத்திருப்பு வீரர்கள்: உஸ்மான் காதர், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.
- 11:29 (IST) 09 Nov 2022நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்!
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாக்கி பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலன்.
- 11:28 (IST) 09 Nov 2022நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்!
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாக்கி பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலன்.
- 11:27 (IST) 09 Nov 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.