Advertisment

விராட் கோலி 'ஃபேக் ஃபீல்டிங்'… இந்தியா வெற்றி பற்றி வங்கதேசம் புகார்

விராட் கோலி 'ஃபேக் ஃபீல்டிங்' செய்தார் என்று கூறியுள்ள வந்தேச அணி இந்தியாவின் வெற்றி பற்றி புகார் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Virat Kohli 'Fake Throw’, Bangladesh complaints Tamil News

Watch viral video: Bangladesh accuse Virat Kohli of ‘fake fielding,’ demand penalty Tamil News

IND vs BAN - T20 World Cup 2022 -  Virat Kohli Tamil News: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நேற்று புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது.

Advertisment

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வங்க தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் (50), கோலி (62), மற்றும் சூர்யகுமார் (30) ஆகிய வீரர்கள் அதிரடியாக விளையாடினர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 185 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த வங்க தேசம் களமிறங்கியது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அந்த அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த நிலையில், போட்டியில் மழை குறுக்கிட்டது. பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்க தேச அணி வெற்றி பெற 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: IND vs BAN highlights: வங்க தேச அணியை சாய்த்த இந்தியா; கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

அதாவது, வங்க தேச அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 85 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியினர் அபார பந்துவீச்சு மற்றும் அசத்தலான ஃபீல்டிங் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இதனால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஃபேக் ஃபீல்டிங் சர்ச்சை… இந்தியா வெற்றி பற்றி வங்கதேசம் புகார்

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் விராட் கோலி 'ஃபேக் ஃபீல்டிங்' (போலி வீசியதற்காக) செய்தார் என்று கூறியுள்ள வந்தேச அணி இந்தியாவின் வெற்றி பற்றி புகார் தெரிவித்துள்ளது.

மேலும், விராட் கோலியின் அந்த செயலுக்கு இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஐசிசியின் சட்ட விதிகளின்படி, 'ஒரு பேட்டரை ஏமாற்றியதற்காக' ஐந்து ரன்கள் அபராதமாக வழங்கப்படுகிறது. அப்படி அந்த ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் போட்டி டையாக இருந்திருக்கும் என்றும் வங்கதேச அணியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: நோ பால்… நடுவருக்கு அழுத்தம் கொடுத்தாரா கோலி? பாகிஸ்தான் பிரபலங்கள் மாறுபட்ட கருத்து

இது தொடர்பாக வங்க தேச விக்கெட் கீப்பர் வீரர் நூருல் ஹசன் கூறுகையில், "களத்தில் நடந்த ஒரு பெரிய சம்பவத்தை நடுவர் எப்படி புறக்கணித்தார் என்று தெரியவில்லை. அது அவர்களுக்கு போட்டியை வெல்லக்கூடும். அது ஈரமான மைதானம் என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். இறுதியில், இந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது, ​​​​ஒரு ஃபேக் ஃபீல்டிங் இருந்தது. அது ஐந்து ரன்கள் பெனால்டியாக இருந்திருக்கலாம். அதுவும் நம் வழியில் சென்றிருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது கூட நடக்கவில்லை." என்று அவர் கூறினார்.

நூருல் ஹசன் குறிப்பிடும் சம்பவம் 7வது ஓவரில் நடந்தது. அப்போது லிட்டன் தாஸ் அக்சர் பட்டேலின் டீப்-ஆஃப்-சைட் மைதானத்தை நோக்கி பந்தை விளையாடினார். அர்ஷ்தீப் சிங் த்ரோவை அனுப்பியபோது, ​​பாயிண்டில் நின்ற கோஹ்லி - பந்து அவரைத் தாண்டிச் செல்லும்போது ஸ்டம்பிக்கு பிடித்து வீசுவது போல நடித்தார். அந்த நேரத்தில், கள நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் பிரவுன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. மறுமுனையில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அதை சுட்டிக்காட்டாததால் களத்தில் இது கவனிக்கப்படாமல் போனது.

இதையும் படியுங்கள்: T20 WC Semi Final: இன்னமும் இந்தியா வெளியேற வாய்ப்பு இருக்கு; வருண பகவான் மனசு வச்சும் காப்பாற்றலாம்!

ஐசிசியின் விதி 41.5 -ன் படி, நியாயமற்ற ஆட்டம் தொடர்பானது, "வேண்டுமென்றே கவனச்சிதறல், ஏமாற்றுதல் அல்லது <தி> பேட்டரின் இடையூறு" ஆகியவற்றைத் தடைசெய்கிறது. மேலும் ஒரு சம்பவம் மீறப்பட்டதாகக் கருதப்பட்டால், அந்த குறிப்பிட்ட பந்து வீச்சை டெட் பால் என நடுவர் அறிவிக்கலாம். பேட்டிங் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும்" என்று கூறுகிறது.

இதையும் படியுங்கள்: IND vs BAN: இலங்கை வீரரை முந்திய கோலி… டி20 உலகக் கோப்பையில் புதிய சாதனை!

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Viral Virat Kohli Sports Cricket T20 Worldcup Viral Video Australia India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment