Advertisment

'தல' என்று அடைமொழி இருந்தாலே அவுட் ஆஃப் ஆர்டரில் தான் இருப்பார்களோ!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தல' என்று அடைமொழி இருந்தாலே அவுட் ஆஃப் ஆர்டரில் தான் இருப்பார்களோ!!

கணிக்க முடியாத மனிதர்களில் எப்போதும் தோனிக்கு ஒரு இடமுண்டு. எப்போது என்ன சிந்திப்பார்? என்ன முடிவு எடுப்பார்? என்ற எப்பேற்பட்ட வல்லுனர்களாலும் கணிக்க முடியாது. சொல்லப் போனால், தோனியின் ஆகப் பெரும் பலம் இந்த கணிக்க முடியா கேரக்டர் தான்,

Advertisment

அதன் ஒரு சாம்பிள், 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவுக்கு கொடுத்தது. அந்த ஒரு ஓவரில் அவர் எடுத்த முடிவு, உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்தது, ஜோகிந்தர் ஷர்மாவுக்கு காவல்துறை உயரதிகாரி பணியை பெற்றுத் தந்தது.

பெண்ணாசையில் சிக்கிய விளையாட்டு பிரபலம் - இப்போ மன்னிப்பு கேட்டு என்ன பயன்?

2014ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோற்ற பிறகு, யாருமே எதிர்பார்க்காத வகையில் ஓய்வை அறிவித்து, பிசிசிஐ முதல் அன்று காலை ஒன்றாக அருகில் பிரஷ் செய்த சக வீரர்கள் வரை ஷாக் அடைய வைத்தார்.

'என்னய்யா இந்த ஆளு... அப்படியே பார்க்குறான்... இதுக்கு இவன் பேசாம நேரடியா திட்டிடலாம்'

தோனி கேப்டன்ஷிப்பின் போது, பவுலர்கள் பந்து வீசும் போது சொதப்பினால், அவர்களின் மைண்ட் வாய்ஸ் இப்படியாகத் தான் இருந்திருக்கும்.

இதோ, 2019 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்தியா தோற்ற பிறகு, இன்று வரை ஒரு சர்வதேச போட்டி கூட விளையாடாமல் சைலண்ட் மோடிலேயே இருக்கிறார். ஒருவழியாக ஐபிஎல் வர, தோனியின் சென்னை வந்து பயிற்சி மேற்கொள்ள, கூடவே கொரானாவும் வர, இப்போது எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டது.

இனி தோனி, அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழ, இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர், தோனி ஆள் அட்ரசே இல்லாமல் இருக்கிறார்.

கொரோனா பாதிப்புக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் நிவாரண நிதி அளித்து வரும் நிலையில், தோனி ரூ.1 லட்சம் கொடுத்தார் என்று கடந்த வாரம் எவரோ கிளப்பிவிட, 'மீடியாக்கள் சரியான செய்தியை வெளியிடுங்கள்' என்று கோபத்தில் பொங்கிவிட்டார் சாக்ஷி. அதன்பிறகு, ஏதேனும் நிவாரணம் கொடுத்தார்களா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இது உணவு பற்றியது அல்ல; உணர்வு பற்றியது - சிலாகித்த யுவராஜ் சிங் (வீடியோ)

அதன்பிறகு, சமீபத்தில் பிரதமர் மோடி, சச்சின், கோலி, கங்குலி உள்ளிட்ட இந்தியாவின் பிரபல விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி, கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். அதிலும் தோனி மிஸ்ஸிங்.

நேற்று இரவு 9 மணிக்கு பிரதமரின் அழைப்பை ஏற்று, பிரபலங்கள் முதல் பொது ஜனம் வரை வீட்டின் மின் விளக்கை அனைத்து, ஒளியேற்றிய நிலையில், அதிலும் தோனியோ, தோனி குடும்பத்தாரோ பங்கேற்றதாக இதுவரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட வெளியாகவில்லை.

'தல' என்று அடைமொழி இருந்தாலே அவுட் ஆஃப் ஆர்டரில் தான் இருப்பார்களோ!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Mahendra Singh Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment