/tamil-ie/media/media_files/uploads/2020/07/a97.jpg)
சிப்லி 120 ரன்களில் வெளியேறினாலும், நிலைத்து நின்ற ஸ்டோக்ஸ் 150 ரன்களைக் கடந்தார்
ENG vs WI Day 2 Score Updates: இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே மான்செஸ்டரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டு சவாலான நிலையை எட்டியுள்ளது. 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முன்னதாக மார்க் உட், ஆண்டர்சனுக்கு ஓய்வு அளித்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் சர்ச்சைக்குரிய விதத்தில் பயோ செக்யூர் பாதுகாப்பை விட்டு வெளியேறி ஊர் சுற்றியதையடுத்து நீக்கப்பட்டார். இதனால் அணியில் சாம் கரண், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டனர்.
‘எனது வெற்றிக்கு காரணம் ஓர் இந்தியர்’ – நெகிழும் இன்சமாம் உல் ஹக்
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 27/2 என்றும் 81/3 என்றும் தொடக்கத்திலேயே இங்கிலாந்து சரிவைக் கண்டது. ரோரி பர்ன்ஸ் 15 ரன்களிலும், சாக் 0, கேப்டன் ரூட் 23 ரன்கள் எடுத்தும் அவுட்டானார்கள். இதையடுத்து, நான்காவது விக்கெட்டுக்கு சிப்லி, ஸ்டோக்ஸ் அபார கூட்டணி அமைத்தது.
படு ஸ்லோவாக விளையாடிய சிப்லி, 312 பந்துகளை சந்தித்து தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
சதம் விளாசிய சிப்லி2000ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர் எடுத்த மிக ஸ்லோவான டெஸ்ட் சதம் இதுவே. தனது சதத்தை நிறைவு செய்ய, வெறும் 5 முறை மட்டுமே அவர் பந்தை கோட்டுக்கு வெளியே அனுப்பினார்.
#lunchtime last ball #ENGvWI#Turnandbouncepic.twitter.com/A8xunLwKKv
— IQBAL ABDULLAH (@iqqiabdullah) July 17, 2020
மறுபக்கம், 255 பந்துகளை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் தனது 10வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
சதம் எடுத்த மகிழ்ச்சியில் ஸ்டோக்ஸ்இதன்பிறகு சிப்லி 120 ரன்களில் வெளியேறினாலும், நிலைத்து நின்ற ஸ்டோக்ஸ் 150 ரன்களைக் கடந்தார்.
கைக் கொடுக்கும் கை: லுங்கி இங்கிடிக்கு ஆம்லா ‘பலத்த’ ஆதரவு
தற்போது, தேநீர் இடைவேளை வரை, இங்கிலாந்து 139 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்டோக்ஸ் 172 ரன்களுடனும், பட்லர் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை, அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us