ICC Women’s T20 World Cup, AUS-W vs IND-W 1st Semi-Final, 2023 Tamil News: தென் ஆப்பிரிக்க மண்ணில் 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோத உள்ளன.
நடப்பு தொடருக்கான லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத அணியாக ஆஸ்திரேலியா வலம் வருகிறது. மேலும் அதே நம்பிக்கையுடன் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆர்வமாக உள்ளது. மறுபுறம், லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்த இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம்பிக்கையுடன் களம் இறங்க உள்ளது.
இதையும் படியுங்கள்: மகளிர் உலகக் கோப்பை: அரை இறுதியில் இந்தியா- ஆஸி. மோதல் எப்போது? லைவ் பார்ப்பது எப்படி?
😮💨#AUSvIND | #T20WorldCup pic.twitter.com/BbQyQy1Oe9
— Australian Women’s Cricket Team 🏏 (@AusWomenCricket) February 21, 2023
இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் மந்தனா ஃபார்முக்கு திரும்பியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பந்து வீச்சில் ரேனுகா நம்பிக்கை அளிக்கிறார். இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாத இந்தியா, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சாய்த்து முன்னேறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனால், இவ்விரு அணிகள் மோதும் நாளைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படியுங்கள்: Women’s T20 World Cup: வரலாறு படைக்குமா இந்தியா? அரைஇறுதியில் ஆஸி,.-யுடன் இன்று பலப்பரீட்சை!
பெண்கள் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா:
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 7 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் சமீபத்திய வெற்றி 2022 டிசம்பரில் சூப்பர் ஓவரில் வந்தது. முன்னதாக, 2020 டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பிப்ரவரி 2020 -க்குப் பிறகு இந்தியா பெற்ற முதல் வெற்றி அதுவாகும்.
இந்தியா சமீபத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஆஸ்திரேலியாவுடன் மோதிய நிலையில், அதில் 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா பெண்கள் டி20:
விளையாடிய போட்டிகள் – 30
ஆஸ்திரேலியா வெற்றி – 22
இந்தியா வெற்றி – 7 (சூப்பர் ஓவரில் ஒரு வெற்றி)
ட்ரா – 1
மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா:
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 5ல் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளனர். 2020 தொடரில் சிட்னியில் நடந்த குரூப் நிலை போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. இது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தனி பெரும் வெற்றி. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக பூனம் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள்: Women’s T20 World Cup: வரலாறு படைக்குமா இந்தியா? அரைஇறுதியில் ஆஸி,.-யுடன் இன்று பலப்பரீட்சை!
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் அரையிறுதியில் மோதுவது இது மூன்றாவது முறையாகும். 2010 மற்றும் 2018 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்தியாவுக்கு தோல்வி மிஞ்சியது. இதனால், இறுதிப் போட்டியைத் தவறவிட்டது.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் டி20 உலகக் கோப்பை
விளையாடிய போட்டிகள் – 5
ஆஸ்திரேலியா வெற்றி – 4
இந்தியா வெற்றி – 1
டிரா – 0
மெல்போர்னில் நடந்த 2020 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. சுவாரஸ்யமாக, டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இன்னும் ஒரு நாக் அவுட் ஆட்டத்தைக் கூட வெல்லவில்லை. மேலும், இந்தியாவுக்கு ஆறுதல் தரும் விஷயமாக 2020ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது உள்ளது.
இதையும் படியுங்கள்: மகளிர் உலகக் கோப்பை: அரை இறுதியில் இந்தியா- ஆஸி. மோதல் எப்போது? லைவ் பார்ப்பது எப்படி?
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil