Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸி.-ஐ இப்படி ஜெயித்தால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
World Test Championship 2023: India's WTC Final chances Tamil News

Border-Gavaskar Trophy: WTC Final chances for India vs AUS

ICC World Test Championship 2022-2023: Team India Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வியாழக்கிழமை (9-ம் தேதி) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரை இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும். தற்போது ஐசிசி-யின் டெஸ்ட் அணிகள் தரவரிசை புள்ளிப்பட்டியலில் 126 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 115 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. எனினும், இந்த தொடரில் வெற்றியைப் பொறுத்து தான் முதலிரண்டு இடங்களை தக்க வைக்க போகும் அணி குறித்து தெளிவான முடிவுகள் கிடைக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உங்களுக்கு புடிச்ச டீம் இறுதிப் போட்டி வாய்ப்ப பாருங்க!

ஆனாலும், இந்த இரு அணிகளுக்கு போட்டியாக இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளும் உள்ளன. 102 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 4வது இடத்திலும், 88 புள்ளிகளுடன் இலங்கை 7வது இடத்திலும் உள்ளன. இதில், இலங்கை நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க நியூசிலாந்துக்கு செல்லகிறது. அதேவேளையில், தென்ஆப்பிரிக்கா அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுகிறது. எனவே, இந்த 4 அணிகளில் யாருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு அதிகம் என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: கோலி vs புஜாரா… ஆஸி.,க்கு எதிராக பெஸ்ட் பிளேயர் யார்?

publive-image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023 புள்ளிகள் அட்டவணை

ஆஸ்திரேலியா முன்னேறி விட்டதா?

இதையும் படியுங்கள்: அப்பாடா… ஒண்ணரை வருஷமா பெஞ்ச்-ஐ தேய்ச்சவருக்கு வாய்ப்பு… ரிஷப் இடத்தை நிரப்புவாரா கே.எஸ்.பரத்?

இதுவரை இல்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புகள் 75.56% உள்ளது. இது இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவை விட கிட்டத்தட்ட 17 சதவீத புள்ளிகள் அதிகம் ஆகும். இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி தனது நான்கு டெஸ்டிலும் தோற்று, நியூசிலாந்தில் இலங்கை இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போகும் சூழல் உருவாகும்.

publive-image

எனினும், இந்த இரண்டு முடிவுகளும் மிகவும் சாத்தியமில்லாத ஒன்றாகும். அனுமானமாக, ஆஸ்திரேலியா 0-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றால் அவர்களின் சதவீதம் 59.65 ஆக குறையும் மற்றும் நியூசிலாந்தில் தொடரை இலங்கை கிளீன் ஸ்வீப் செய்தால் அவர்களின் சதவீதம் 61.11 என்று இருக்கும்.

இதையும் படியுங்கள்: ‘பயிற்சியின் முதல் நாளே 5- 6 முறை ஸ்மித்தை அவுட் செய்தேன்’: டூப்ளிகேட் அஷ்வின் பேட்டி

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா 4-0, 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள். தொடர் 2-2 என சமனில் முடிவடைந்து, நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றால், இந்தியா இறுதிப் போட்டிக்கான போட்டியில் இருந்து வெளியேறும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 1-1 என சமநிலையில் இருந்தால், தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கான வாய்ப்பு நிலைகுலைந்து விடும்.

இதையும் படியுங்கள்: 4 ஸ்பின்னர்களை தயார் படுத்தும் இந்தியா: நாக்பூர் பிட்ச் யாருக்கு சாதகம்?

இலங்கையின் வாய்ப்பு எப்படி?

நியூசிலாந்திற்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு இந்தியா ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் அல்லது இந்தியா தொடரை இழக்க வேண்டும் அல்லது தொடரை டிராவில் முடிக்க வேண்டும்.

publive-image

நியூசிலாந்து தொடரை 1-1 என இலங்கை சமன் செய்தால், இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 1-3 அல்லது 0-1 என்ற கணக்கில் தோற்க வேண்டும். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வேண்டும். இப்படி நடந்தால் இலங்கை அணிக்கான வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

இதையும் படியுங்கள்: ஆஸி,. 5, இங்கி,. 1 முறை… மகளிர் டி20 உலக கோப்பை: முழு விவரம் இங்க பாருங்க!

தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்புகள் என்னென்ன?

தென் ஆப்பிரிக்கா அதன் சொந்த மண்ணில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். பின்னர் இலங்கை நியூசிலாந்தில் இரண்டு டெஸ்டிலும் தோல்வியடைய வேண்டும் அல்லது ஒன்றில் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.

publive-image

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா 20 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற வேண்டும். அதாவது 1-1 என்ற கணக்கில் டிரா அல்லது இந்தியாவுக்கு தொடர் தோல்வி அடைய வேண்டும். இப்படி நிகழ்ந்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு இறுகிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: சுழல் வலை விரிக்கும் அஸ்வின்… சிக்கி சின்னாபின்னமாகப் போகும் 3 ஆஸி,. வீரர்கள்!

போட்டியில் வேறு ஏதேனும் அணிகள் உள்ளதா?

இங்கிலாந்து (107), வெஸ்ட் இண்டீஸ் (79), பாகிஸ்தான் (88), நடப்பு சாம்பியனான நியூசிலாந்து (99) மற்றும் வங்க தேசம் (49) ஆகிய அணிகள் களத்தில் உள்ள மற்ற அணிகளாக உள்ளன. ஆனால், இந்த அணிகள் எந்தவித தாக்கத்தையும் நிலையில் இல்லை.

இதையும் படியுங்கள்: IND vs AUS: தொடக்க வீரர்கள் யார்? விக்கெட் கீப்பர் யார்? இந்தியா பிளேயிங் 11 இழுபறி

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Indian Cricket Team World Test Championship Srilanka Australia South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment