Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா vs ஆஸ்திரேலியா மோதும் தேதி, இடம், ரிசர்வ் டே விவரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் டே ஜூன் 12ம் தேதியாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WTC Final 2023: India Vs Australia, Date, Venue, Reserve Day, Timings, Squads in tamil

India Vs Australia, WTC Final 2023: Date, Venue, Reserve Day, Timings, Probable Squads And All You Need To Know Tamil News

 World Test Championship final 2023,  India Vs Australia Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் புதிய முயற்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும். அந்த வகையில், 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது.

Advertisment

இதையும் படியுங்கள்: ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்தியாவுக்கு இந்த பவுலிங் படை போதுமா?

இந்திய மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி என்பதை உறுதி செய்தது. அடுத்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள போகும் 2வது அணி எது? என்பதற்கான போட்டி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கடுமையாக இருந்தது.

இதையும் படியுங்கள்: WTC Final: ஆடாமலே ஜெயிச்ச இந்தியா; இலங்கை தோல்வியால் கிடைத்த செம்ம சான்ஸ்!

publive-image

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றி பெற்ற நிலையில், புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தரவரிசையில் 60.29 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3வது இடத்திலும் இருந்தன. இந்திய அணி தகுதி பெற, ஆஸ்திரேலியாவுடன் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது ட்ரா செய்ய வேண்டும் அல்லது நியூசிலாந்து மண்ணில் நடக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை ஒரு போட்டியில் தோற்க வேண்டும் என்று இருந்தது.

இதையும் படியுங்கள்: ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்தியாவுக்கு இந்த பவுலிங் படை போதுமா?

இதையும் படியுங்கள்: சேப்பாக்கம் ஸ்டேடிய புதிய ஸ்டாண்ட்டுக்கு கருணாநிதி பெயர்… திறந்து வைக்கும் ஸ்டாலின், தோனி!

publive-image

இந்நிலையில், நியூசிலாந்து அணியுடானான போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை தழுவியது. மறுபுறம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம், தற்போது இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இதையும் படியுங்கள்: WTC Final: ஆடாமலே ஜெயிச்ச இந்தியா; இலங்கை தோல்வியால் கிடைத்த செம்ம சான்ஸ்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி பற்றிய விவரங்கள்:

publive-image

இந்தியா vs ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7ம் தேதியன்று நடைபெறும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்: சேப்பாக்கம் ஸ்டேடிய புதிய ஸ்டாண்ட்டுக்கு கருணாநிதி பெயர்… திறந்து வைக்கும் ஸ்டாலின், தோனி!

இந்தியா vs ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே உள்ளதா?

ஆம், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் டே ஜூன் 12ம் தேதியாகும்

இந்தியா vs ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்

இதையும் படியுங்கள்: ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்தியாவுக்கு இந்த பவுலிங் படை போதுமா?

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், இஷான். கிஷன், குல்தீப் யாதவ்.

இதையும் படியுங்கள்: ’21 வருட கனவு’… ரஜினியை சந்தித்த சஞ்சுவுக்கு ஃபேன் பாய் மொமண்ட்!

ஆஸ்திரேலியா அணி:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி, நாதன் லியோன், ஸ்காட் போலண்ட், பாட் போலண்ட், மாட் ரெட்ஷாவ்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Virat Kohli India Vs Australia Sports Rohit Sharma Cricket Pat Cummins Indian Cricket Team World Test Championship Indian Cricket Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment