zinedine zidane, marco Materazzi, materazzi, zidane, 2006 world cup, world cup 2006, zidane headbutt, zidane head butt, zidane materazzi, ஜிடேன், உலகக் கோப்பை கால்பந்து 2020, விளையாட்டு செய்திகள்,
கடந்த 2006-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதியது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது.
Advertisment
பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதால் ஆத்திரமடைந்த ஜிடேன், மெட்ரசியை தலையால் முட்டி கீழே தள்ளினார்.
இந்த போட்டியை உலகம் முழுக்க தொலைகாட்சிகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டிருந்தனர். மைதானத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதனால் நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்ட ஜிடேன், உடனடியாக களத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பிரான்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி கண்டு, 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இத்தாலி அணி 4வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
Advertisment
Advertisement
இறுதி போட்டி முடிந்ததும் ஜிடேன், "கோடிக்கணக்கான குழந்தைகள் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வன்முறையை வெளிப்படுத்தும் விதத்தில், நடந்து கொண்டது குறித்து நான் வெட்கப்படுகிறேன். கால்பந்து ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில், பல வருடங்கள் கழித்து இந்த சம்பவத்தின் ரகசியத்தை உடைத்துள்ளார் மெட்ரசி. இதுகுறித்து இத்தாலிய ஊடகம் PassioneInterக்கு மெட்ரசி அளித்த பேட்டியில், "போட்டியின் போது என்னிடம் வந்து தனது சட்டை வேண்டுமா என்று ஜிடேன் கேட்டார். அதற்கு நான், உங்கள் சட்டை வேண்டாம், உங்கள் சகோதரி வேண்டும் என்று சொன்னேன்" என ஜிடேன் கோபப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
தனி மனிதர்களின் கிண்டலும், அதனால் ஏற்படும் கோபமும், கோடிக்கணக்கான மக்களின் கனவையும், ஆசையையும், நேரத்தையும், எதிர்பார்ப்பையும் எப்படி வீணடிக்கும் என்பதற்கு இந்த சம்பவே ஒரு சாட்சி.
அந்தப் போட்டியில் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், ஜிடேன் வெளியேற்றத்துக்கு பிறகு, ஆட்டத்தின் சூழலை தனக்கு சாதமாக்கிய இத்தாலி கோப்பையை கைப்பற்றியது. இல்லையெனில், என்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்க வேண்டிய அணி பிரான்ஸ் என்றால், அது மிகையல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”