17 years old girl suicide, tamil news, latest tamil news, tamil nadu news, chennai news, manapparai news, தமிழக செய்திகள், இந்திய செய்திகள், லேட்டஸ்ட் தமிழக செய்திகள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள காவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
Advertisment
அந்த நபர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாக, தகவல் தெரிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து உறவினரான ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைத்துவிடலாம் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
Advertisment
Advertisements
இது தொடர்பாக ராம்கி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் பேசியுள்ளனர். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பெண்ணை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ராம்கியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராம்கி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த மே மாதம் 29 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை அவரை கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, பெற்றோருடன் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். ராம்கியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை சிறுமி கைவிட்டார்.
இந்நிலையில், ராம்கி இருப்பிடத்தை செவ்வாய்க்கிழமை போலீசார் கண்டறிந்தும், அவர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் கைது செய்ய முடியவில்லை.
இதனால், மிகுந்த மனவேதனைக்கு ஆளான சிறுமி, நேற்று வீட்டில் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி.ஜெயராம், டி.ஜ.ஜி.ஆனி விஜயா, எஸ்.பி.ஜியாவுல் ஹக் ஆகியோர் மணப்பாறை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை தற்கொலைக்கு தூண்டியதாக வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராம்கி மீது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்து போலீசார் ராம்கியை கைது செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil