18 எல். எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு இன்று மதியம் 1 மணி அளவில் 7வது வழக்காக எடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் முக்கியமாக ஈடுபட்டவர்களுள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.எக்களும் அடக்கம். இவர்கள் அனைவருமே டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவர்கள் 18 பேரும் யார்? வழக்கில் ஈடுபட்டுள்ள 18 பேரில் பெயர் மற்றும் ஊர் தகவல்கள்:
1. தங்கத்தமிழ் செல்வன் - ஆண்டிப்பட்டி
2. ஆர்.முருகன் - அரூர்
3. சோ.மாரியப்பன் கென்னடி - மானாமதுரை
4. கே.கதிர்காமு- பெரியகுளம்
5. சி.ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம்
6. பி.பழனியப்பன் - பாப்பிரெட்டிப்பட்டி
7.வி.செந்தில் பாலாஜி - அரவக்குறிச்சி
8. எஸ்.முத்தையா - பரமக்குடி
9. பி.வெற்றிவேல் - பெரம்பூர்
10. என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர்
11. எம்.கோதண்டபாணி - திருப்போரூர்
12. டி.ஏ.ஏழுமலை - பூந்தமல்லி
13. எம்.ரெங்கசாமி - தஞ்சாவூர்
14. ஆர்.தங்கதுரை - நிலக்கோட்டை
15. ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர்
16. எஸ்.ஜி.சுப்பிரமணியன் - சாத்தூர்
17. ஆர்.சுந்தர்ராஜ் - ஒட்டப்பிடாரம்
18. கே.உமா மகேஸ்வரி - விளாத்திகுளம்
இந்த 18 பேரின் தகுதி நீக்கம் வழக்கில், எவ்விதமான தீர்ப்பும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 பேருக்கும் சாதகமாகவும் தீர்ப்பு வழங்கப்படலாம் அல்லது எதிராகவும் அளிக்கப்படலாம். ஒருவேளைத் தீர்ப்பு தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக வந்தால், இத்துடன் துவண்டு விடப்போவதில்லை என்றும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து பிற செய்திகள் அறிய:
18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு!
18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை...ஒரு கண்ணோட்டம்!
18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு அனைத்து தரப்பு வாதங்கள்!!!