22 years old independent candidate won : தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. 60.70% வாக்குகள் பதிவாகியது. இன்று அந்த தேர்தல் முடிவுகளை அறிவித்து வருகிறது மாநில தேர்தல் ஆணையம். திருச்சி துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5-ல் சினேகா என்ற பட்டதாரி சுயேட்சையாக போட்டியிட்டார். 494 வாக்குகள் பெற்று சினேகா அந்த வார்டில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ. பட்டதாரியான அவருக்கு வயது 22 மட்டுமே. இந்த ஆண்டு அதிக அளவில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவு பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல் 2022 முடிவுகள் தொடர்பான மேலும் பல சுவரசியமான செய்திகள் இங்கே
ஜெயக்குமார் சிறையில் அடைப்பு: என்னென்ன பிரிவுகளில் வழக்கு?
நகராட்சி, பேரூராட்சிகளில் பலம் யாருக்கு?
‘உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை’ அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்