மேட்டுப்பாளையம் சுவர் பலி : 3,000 தலித்துகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறுகின்றனர்
ஆரம்பத்தில் சிவசுப்பிரமணியம் மீது பிரிவு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 304 (அ) மற்றும் தமிழக சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
ஆரம்பத்தில் சிவசுப்பிரமணியம் மீது பிரிவு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 304 (அ) மற்றும் தமிழக சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இந்து மதத்தில் தலித்துகளுக்கு இழிவாக நடத்தப்படுவதாக நாடூர் குடியிருப்பாளர்களும், தமிழ் புலிகள் கட்சியின் உறுப்பினர்களும், இந்து மதத்தை விடுத்து இஸ்லாத்திற்கு மாறுவதாக அறிவித்தனர்.
Advertisment
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
முதல் கட்டமாக ஜனவரி 5 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் 100 பேர் இஸ்லாமிய மதத்திற்கு வருவார்கள்," என்றும் படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் இந்த செயல்பாடு தொடங்கும் என்று அறிவிக்கபப்டுள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, நடூர் ஏடி காலனியில் சிவசுப்பிரமணியம் என்பவரின் பங்களாவை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த 20 அடி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் வசித்த 17 பேர் பலியாகினர். இந்த காலனியில் அருந்தாத்தியார் சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, நடந்த பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் சுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
சிவசுப்பிரமணியன் வீட்டுச் சுவர் ஒருவகையான தீண்டாமை சுவர். தனது பங்களாவை ஒட்டி எந்த காரணமின்றி அந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த சுவரை தாங்குவதற்கு எந்தா வகையான தூண்கள் கட்டமைப்பும் இல்லை.எனவே, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு சென்றிருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சிவசுப்பிரமணியம் மீது பிரிவு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 304 (அ) மற்றும் தமிழக சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
பிரிவு 304 (அ) கூறுகிறது:
கொலைக்கு உட்படுத்தாதவர் என்று கருதப்பட்ட குற்றவாளி தனது கவனக்குறைவான செயளால் மரணத்தை விளைவிப்பாராயின், செயலையும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது அல்லது இரண்டும் விதிக்கப்படுவார்.
பின்னர், அவரது தண்டனை 304 (ii) ஆக மாற்றப்பட்டது, இது கொலைக்குரிய குற்றமற்ற கொலை தொடர்பானது.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை கொண்டு செல்ல வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததாலும்,நீதிமன்றக் காவலில் இருந்து 20 நாட்களில் சிவசுப்பிரமணியம் ஜாமீனில் வெளிவந்ததாலும், அருந்ததியர் வாழ்வுக்கு நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவனை போலீசார் கைது செய்ததாலும் , 3000 தலித் மக்கள் இஸ்லாத்திற்கு மாறயிருப்பதாக தமிழ் புலிகள் கட்சி கூறியுள்ளது.