கும்மிடிப்பூண்டி அருகே காரில் ரூ.5 கோடி பறிமுதல்

பணம் பறிமுதல் செய்யப்பட்டு மூவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

By: July 16, 2020, 12:35:40 PM

கும்மிடிபூண்டிக்கு அருகிலுள்ள அரம்பாக்கம், எளாவூர் சோதனைச் சாவடியில் புதன்கிழமை அதிகாலையில் ஒரு காரில் ரூ 5 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாக்டவுனில் மதுபான விற்பனைக்கு அனுமதி.. பிரபல கிளப்கள் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

கோயம்புத்தூர் பதிவு எண்ணைக் கொண்ட காரில் மூன்று நபர்கள் இந்த பணத்தை எடுத்துச் சென்றனர். காரில் இருந்த இரண்டு பேர், ஆந்திராவின் ஓங்கோலைச் சேர்ந்த வசந்த் மற்றும் லட்சுமி நாராயணன் எனவும், மற்றொருவர் நாகராஜன் என்ற டிரைவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

”ஆந்திராவில் இருந்து பெரும் தொகையை எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்களை அவர்களால் கொடுக்க முடியவில்லை. மூவருக்கும் முறையான பயண இ-பாஸ் இல்லை” என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த காரில் ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வின் பெயரில் ஸ்டிக்கர் இருந்தது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் மற்றும் வருமான வரி அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டு மூவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

காரின் உரிமையாளரை ஆந்திராவில் இருந்து ஐ-டி அதிகாரிகள் வரவழைத்துள்ளனர். ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால், அந்த பணம் உரிமையாளரிடம் திருப்பித் தரப்படும் என்று ஐ-டி அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு ஐ-டி அதிகாரிகளும் காரின் உரிமையாளரைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:5 crore rupees seized from car gummidipoondi chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X