திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் இரும்பு வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

By: Updated: July 16, 2020, 10:00:35 AM

திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Nadu 12th results live: 94.80 சதவீத மாணவிகள் தேர்ச்சி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.41

நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற டாடா சுமோ கார் அதிகாலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பாதிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரும்பு வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ‘செக்’ செய்வது எப்படி?

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக, அரசிடம் இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் சாலையில் குறைந்த அளவு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. இந்த நேரத்திலும் இப்படியான கோர விபத்துகள் நடப்பது, பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tindivanam tata sumo car accident nellai to chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X