Madurai Jallikattu Live Feed: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மாடு முட்டி 36 பேர் காயம் அடைந்தனர். சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு வழங்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
மொத்தம் 688 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 36 பேர் காயமடைந்தனர். சோழவந்தான் சங்கம்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதர் 27, பலியானார்.முதல் பரிசு கார்16 காளைகளை அடக்கிய அலங்காநல்லுார் ரஞ்சித் முதல் பரிசான காரை தட்டிச்சென்றார். இவர் ஒரே சுற்றில் 16 காளைகளையும் அடக்கி மற்றவர்களை பின்னுக்குத்தள்ளியது குறிப்பிடத்தக்கது. 14 காளைகள் அடக்கிய அழகர்கோயில் ஆயத்தம்பட்டி கார்த்திக் 2வது பரிசாக டூவீலர், 13 காளைகள் அடக்கிய அரிட்டாப் பட்டி கணேசன் 3வது பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்றனர்.இதே போன்று களத்தில் 53 நிமிடம் நின்று விளையாடிய மதுரை குலமங்கலம் மாரநாடு என்பவரின் காளை 12 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்தது. உரிமையாளருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: குக்கர் முதல் கார் வரை பரிசுகளை வாரிக் குவித்த மாடுபிடி வீரர்கள்!
சீறிப்பாயும் காங்கேயம் காளை! நின்னு வெளையாடும் புலிக்குளம் காளை… ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தமிழகம்!
ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வுபெறற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முதல் மரியாதை செய்யப்பட்ட 3 காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன.
ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 921 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். போட்டி துவஙகும் முன்னர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வீரர்களுக்கு அரசு வேலைவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில், வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை வழங்கப்படும். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு, மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் பெயரில் ஜெயலலிதா பேரவை சார்பில் கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறையும் அவர்கள் சார்பில் இரு கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் முதல்வர் கையால் இப்பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.