Advertisment

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட்டம்: பரத நாட்டிய கலைஞரின் எஸ்.எம்.எஸ் பிரச்சாரம்

மத்திய அரசின் ’ஸ்வர்ண கமல்’ விருது பெற்றவருமான கிருஷ்ண குமார் சமுதாயத்தில் பாஸிட்டிவ் எனெர்ஜியை பரப்ப பரதநாட்டியத்தை பயன்படுத்தி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chinnamanur j krishna kumar, sms for covid 19

chinnamanur j krishna kumar, sms for covid 19

எஸ்.எம்.எஸ் என்றால் குறுந்தகவல் சேவை, ஆனால் பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆசிரியருமான சின்னமனூர் ஜே கிருஷ்ண குமாரைப் பொறுத்தவரை இது சோஷியல் டிஸ்டன்சிங், மாஸ்க் மற்றும் சானிடைஸிங்.

Advertisment

கோவிட் -19 இன் பரவலை எதிர்த்துப் போராடவும் "எஸ்எம்எஸ்"-ஐப் பற்றி சிந்திக்கவும், பயிற்சி செய்யவும் கிருஷ்ண குமார் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதில் தீவிரமாகியுள்ளார். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நெருக்கமான தொடர்பையும் கொண்டுள்ளார்.

’கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பாருங்கள், தொற்றை அல்ல’ – மருத்துவ வல்லுநர்கள்

தமிழ் பழமொழியான "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை பிரச்சாரம் செய்து, ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய, "கொரோனா ... கொரோனா ..." என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

யார் தமிழன்? கமல்ஹாசன்- ஏ.ஆர்.ரகுமான் சுவாரசிய உரையாடல்

’பத்மபூஷன்’ விருது பெற்ற சி.வி சந்திரசேகரின் சீடரும், மத்திய அரசின் ’ஸ்வர்ண கமல்’ விருது பெற்றவருமான கிருஷ்ண குமார் சமுதாயத்தில் பாஸிட்டிவ் எனெர்ஜியை பரப்ப பரதநாட்டியத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த பூட்டுதலின் போது மற்ற கலைஞர்கள் தங்கள் சேவையைத் தொடரவும், புதிய வழிமுறைகளை முயற்சிக்க ஊக்குவிப்பதும் தான் இதன் நோக்கமாகும். இதனால் மற்ற கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் "வழக்கம் போல் வாழ்க்கையை" மாற்றுவதற்கான வாய்ப்பையும் நம்பிக்கையையும், அளிக்க முடியும் என்கிறார் கிருஷ்ண குமார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment