Check how chennai celebrates pongal : பொங்கல் கொண்டாடுவதற்காக மக்கள் அனைவரும் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர் நோக்கி சென்றுவிடுவார்கள். பின்பு தெருக்களும், சாலைகளும் வெறிச்சோடி காணப்படும். சென்னையில் பொங்கல் என்றால் அவ்வளவு தானா என்ற எண்ணமே வந்துவிடும் அளவுக்கு காற்று வாங்கும். எல்லார் வீட்டிலும் குக்கர் பொங்கல் தான் என்று கேலிகள் வேறு வரும். ஆனால் சென்னையில் பொங்கல் எப்படி கொண்டாடப்படுகிறது என தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
போகி
முதல் நாள் போகி. பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் இந்த நாளின் மகத்துவம். அதற்கேற்றார் போல் தான் சென்னையின் பல்வேறு மையங்களும். பழைய பொருட்கள், துணிகள், தேவையற்ற அனைத்தும் முதலில் எரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்தும் குப்பைக்கு வந்து விடுகிறது. இராண்டு தினங்களுக்கு முன்பே மயிலாப்பூரில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : ‘போகியைப்’பாத்துக் கொண்டாடுங்க, மனதார கேட்கும் சென்னை விமான நிலையம்!
பொங்கல் & மாட்டுப் பொங்கல்
இரண்டாம் நாள் பொங்கல். மற்ற மாவட்ட மக்களைப் போலவே இங்கும் காலையில் எழுந்து வாசல் தெளித்து வண்ண வண்ணமாக கோலங்கள் போடுவதையும் வாடிக்கையாக தான் வைத்திருக்கின்றார்கள். வீடுகளில் மாவிலை தோரணங்கள், செவ்வந்தி பூக்கள் தோரணங்கள் என்றும் இருக்கத்தான் செய்கிறது. அக்கம் பக்க வீட்டினருடன் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து, இனிப்புகள், பலகாரங்கள் பகிர்ந்தும் பொங்கல் நாளை கொண்டாடுகிறார்கள். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். இந்த ஒருநாள் மட்டும் இங்கு கொண்டாட்டங்களுக்கு கொஞ்சம் பற்றாக்குறை இருந்தாலும், சினிமாக்கள், பொழுந்து போக்கு நிகழ்ச்சிகள் என்று பலரும் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனாலும் யோசிச்சுக்கோங்க, இன்னைக்கு தமிழகம் எல்லாம் ஜல்லிக்கட்டு விளையாட்டு தங்கு தடையின்றி நடைபெற முக்கிய களமாடியது சென்னை தான்.
காணும் பொங்கல்
நான்காம் நாள் காணும் பொங்கல். ஊர் பக்கங்களில் பூப்பறிக்கும் திருவிழா என்ற பெயருடன் வழங்கப்படும். இங்கு சென்னையில் இருப்பவர்கள் தங்களின் இந்த பொங்கலை மெரினாவில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இந்ந்த ஆண்டு இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் மெட்ரோ செய்துள்ளது. 15ம் தேதி முதல் 17 தேதி வரையில் மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு 50% சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மேலும் அரசினர்தோற்றம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ நிலையங்களில் இருந்து மெரினாவுக்கு செல்ல சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.