‘போகியைப்’பாத்துக் கொண்டாடுங்க, மனதார கேட்கும் சென்னை விமான நிலையம்!

சென்னை விமான நிலையம் : அடர்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப்பொருட்களை எரிக்க வேண்டாம் என்பதை நாங்கள் மனதார கேட்டுக் கொள்கிறோம்.

By: Updated: January 13, 2020, 11:47:57 PM

தமிழகத்தில் மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகி விழாவாக கொண்டாப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. அதாவது,  பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது தான்  இதில் உள்ள தத்துவமாகும்.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

பொங்கல் திருவிழா: மல்லிகை பூ கிலோ 7000 வரை உயர வாய்ப்பு

ஆனால், காலப்போக்கில் வீட்டில் பயனற்ற பொருட்களை எரிக்கும் பழக்கமும் மக்களிடத்தில் இந்த விழாவின் போது ஏற்பட ஆரம்பித்தது. இந்த செயல்களால், சாலையில் காற்று மாசுபடுவதுடன், புகை மண்டலங்களாகவும் மாறி போகின்றன.


உதாரணமாக, 2018ம ஆண்டு  சென்னை சென்னை விமான வழித்தடங்களில் கடினமான கரும்புகை சூழ்ந்ததால் விமான நிலையம் கடும் பாதிப்பை சந்தித்தது. கிட்டத்தட்ட 73 புறப்பாடுகளும் 45 வருகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற அசாதாரண சூழல்களை தடுக்க, இந்திய விமான நிலைய ஆணையம் விமான நிலையம் அருகில் இருக்கும் மக்களுக்கு சில அறிவுரைகளை தற்போது வழங்கியிருக்கிறது.

பொங்கல் 2020 : அந்த ரெண்டு நாள் லீவ் இல்லையாமே! சோகத்தில் அரசு ஊழியர்கள்!

ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை விமான நிலையத்தின் அருகாமையில் தங்கியுள்ள மக்கள் போகி கொண்டாட்டங்களின் போது அடர்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப்பொருட்களை எரிக்க வேண்டாம் என்பதை நாங்கள் மனதார கேட்டுக் கொள்கிறோம் “என்று கூறியுள்ளது.

சென்னை விமான நிலையம் ஆணையம் கடந்த சில வருடங்களாகவே, பொது மக்களுக்கு போகி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்  விளைவாக,  2019ம் ஆண்டு போகியின் விழாவின் பொது பொது மக்களின் ஒத்துழைப்பால் சென்னை விமான நிலையம் இயல்பாக இயங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:During bhogi not to burn waste around chennai airport aai request chennai people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X