சென்னையில் மாநகராட்சியின் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் கண்காணிப்பு அமைப்பின் (HQIMS) கீழ், தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது என்று தரவு தெரிவிக்கிறது.
Tamil News Today Live : மதுரையில் மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 21,01,808 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 14.5% பேர் பயணத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும், 25.6% பேர் கோவிட் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தனர். கோவிட் நோயாளிகள், அவர்களின் தொடர்புகள் மற்றும் ஐ.எல்.ஐ அறிகுறிகளின் காரணமாக காய்ச்சல் கிளினிக்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மீதமுள்ளவர்கள்.
”HQIMS 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இலவச பாஸ் முறை காரணமாக பயண தனிமைப்படுத்தலும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், நாங்கள் 25 லட்சத்தை தாண்டுவோம்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மரணத்துக்கும் வாழ்வுக்கும் நடுவுல வெறும் சில செ.மீ தான்… பதைபதைக்க வைக்கும் வீடியோ!
ட்ரேஸ் செய்ய முடியாதவர்கள்
சென்னை கார்ப்பரேஷன் மையங்கள், அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கடந்த சில நாட்களாக சோதனை செய்யப்பட்ட மொத்தம் 7,942 பேரில் 85 பேரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. தனியார் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலான ‘நான் ட்ரேஸிங்’ தொற்றுகளுக்குக் காரணம். தனியார் ஆய்வகங்களில் பெறப்பட்ட 2,018 மாதிரிகளில், 65 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாநகராட்சி மையங்களில் பரிசோதிக்கப்பட்ட 5,122 பேரில், ஒன்பது பேர் மட்டுமே கண்டுபிடிக்க முடியாதவர்கள். அரசாங்க ஆய்வகங்களில் சோதனை செய்த 802 பேரில் 11 பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள் என்று தரவு காட்டுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”