scorecardresearch

சிறார் பாலியல் வல்லுறவு வீடியோ பகிர்வு, எழும்பூர் தொழிலதிபர் கைது

சிறுவர் பாலியல் வல்லுறவு வீடியோக்களை  பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் பகிர்ந்ததற்காக சென்னை விமான நிலையத்தில் 49 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

Child-Sexual-Abuse

சிறுவர் பாலியல் வல்லுறவு வீடியோக்களை  பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் பகிர்ந்ததற்காக சென்னை விமான நிலையத்தில் 49 வயது தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூர், மான்டித் சாலையில் உடற்பயிற்சி உபகரணங்களை விற்கும் தொழில் செய்து வருகிறார் சுமித் குமார் கல்ரா.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…

சிறுவர் ஆபாசப் வீடியோவை சுமித்  கல்ரா பதிவு இறக்கம் செய்ததோடு, அதை பகிர்ந்து வந்ததை காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் கண்டறிந்தது. தகவலின் படி சுமித் ஏப்ரல் 29, 2019 அன்று டார்க் வெப்பில் இருந்து சிறுவர் பாலியல் வல்லுறுவு வீடியோக்களை  பதிவிறக்கம் செய்ததாகவும், அதை பேஸ்புக் மெசஞ்சர் மூலம் தனது நண்பருக்கு பகிர்ந்ததாகவும்  கூறப்படுகிறது.


தொலைபேசி எண் மற்றும் வீடியோ பகிர பயன்படுத்த சாதனத்தின்  ஐபி முகவரியுடன் பொருந்தியதை உறுதிபடுத்திய தேசிய மையம், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றப் பிரிவு போலீசாரிடம் பகிர்ந்துள்ளது.

ஹீரோக்கள் என்ற வரையறையை மாற்றி எழுத வேண்டிய காலகட்டம்

அதன் அடிப்படையில்,  டெல்லியில் இருந்து சென்னையில் தரையிறங்கியபோது விமான நிலையத்தில் வைத்தே சுமித்  கல்ரா கைது செய்யப்பட்டார்.  முதலில் போலிசாரின் வாதங்களை மறுத்த அவர், பின்பு பலதரப்பட்ட  ஆதாரங்களை காட்டியபோது தனது தவறை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012  (போக்ஸோ) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சுமித்  கல்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

முன்னதாக, திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ், இணையத்திலிருந்து குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது, தனது சமூகவலைத் தள பக்கங்களில் உள்ள நண்பர்களுக்குப் பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

ஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா?

சிறுவர் பாலியல் வல்லுறவு வீடியோக்களை ஆன்லைனில் பகிர்ந்த 1500க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளை கண்காணித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு சென்னை போலிஸ் தெரிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai egmore businessman arrested for possesing and viewing chidl pornography