chennai weather: கோடை வெயில் கொளுத்தி வெக்கையை உண்டு பண்ணும் நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருந்த போதும் சென்னையில் மழையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.
ஆனால் இப்போது மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை வானிலை மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
இது வரும் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புண்டு. இதன் காரணமாக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
மேலும் படிக்க : இன்று முதல் தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் மழை பெய்யக் கூடும்
Live Blog
chennai weather: இந்திய வங்கக்கடலோரத்தில் புயல் போவதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு விடுத்துள்ளது. பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவித்துள்ளது.
சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28-ஆம் தேதி புயலாக மாறும்.அவ்வாறு உருவானால் வடதமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. எனவே ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் புயலாக மாறும். இந்த தேதிகளில் கனமழை பெய்யும்.
ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த இரு தினங்களுக்கு தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு. வட மாநிலங்களான ஆசாம், மேகாலயா, அருணாச்சலபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கீம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy to very heavy rainfall at isolated places likely over #Tamilnadu & #Puducherry and Heavy Rainfall at isolated places likely over #Assam & #Meghalaya, #Arunachal Pradesh, and Sub-Himalayan #WestBengal & #Sikkim.
IMD
— NDMA India (@ndmaindia) 25 April 2019
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
”புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது”
Weather Forecast and warning based on 0300 UTC of 24th April, 2019 pic.twitter.com/ep4epI4fkj
— IMD Weather (@IMDWeather) 24 April 2019
இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கடற்கரையை நோக்கி இந்தப்புயலானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights