குளச்சல் டிராபிக் இன்ஸ்பெக்டர் , உளவு துறை சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ஆகியோர் குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கே சென்று பாட்டிக்கு மீன் வாங்கி கொடுத்துள்ளனர்.
குளச்சல் டிராபிக் இன்ஸ்பெக்டர் , உளவு துறை சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ஆகியோர் குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கே சென்று பாட்டிக்கு மீன் வாங்கி கொடுத்துள்ளனர்.
Colachel policemen buy fish for older woman amid lockdown
Colachel policemen buy fish for older woman amid lockdown : கடற்கரை நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் நபர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக இருப்பது மீன் தான். உள் நாட்டு மக்களுக்கு காய்கறிகளை போல் கடல் பிரதேச மக்களுக்கு மீன் அவர்களின் உணவில் மிக முக்கியமான ஒன்று. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மீன் பிடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
Advertisment
ஒரு மாதத்திற்கு பிறகு சுழற்சி முறையில் மீன் பிடிக்க, 29ம் தேதி மீன் வளத்துறை அனுமதி தந்தது. குமரியின் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் குளச்சல் சி.எம்.சி காலனி சாலையில் தனியாக வசிக்கும் பாட்டி ஒருவர் நேற்று தன் வீட்டின் முன்பு மிகவும் சோகமாக அமர்ந்திருக்கிறார். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி பாட்டியிடம் நலம் விசாரித்து உள்ளார். ஏற்கனவே இந்த பாட்டிக்கு தேவையான காய்கறி, அரிசி மற்றும் பருப்பினை வாங்கிக் கொடுத்தவர் அந்த ஏ.எஸ்.பி.
தனக்கு நன்றாக தெரிந்த காவல்துறை அதிகாரி என்பதால் பாட்டி “மீன் சாப்பிட்டு ஒரு மாதம் ஆச்சு. எனக்கு மீன் வாங்கி தர்றீங்களா?” என்று கேட்டுள்ளார். பாட்டியின் நிலைமையை உணர்ந்த ஏ.எஸ்.பி. பாட்டிக்கு உடனே மீன் கிடைக்க ஏற்பாடு செய்தார். குளச்சல் டிராபிக் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், உளவு துறை சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோர் குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கே சென்று பாட்டிக்கு மீன் வாங்கி கொடுத்துள்ளனர்.