Jothimani MP: செய்தி சேனல்களில் விவாத நிகழ்ச்சி என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அந்த வகையில், நேற்று மாலை ஏழு மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில், கேள்வி நேரம் என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜகவின் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரு நாகராஜனை உட னே கைது செய்ய வேண்டும்: தலைவர்கள்- ஊடகவியலாளர்கள் வற்புறுத்தல்
அப்போது பேசிய கரு நாகராஜன், ஜோதிமணி எம்பி-யை இழிவாக குறிப்பிட்டார். டிவி விவாதம் என்பதை மறந்து, சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணை பொதுவெளியில் இழிவாக அழைத்தார். நாகராஜனை கண்டித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஜோதிமணி. பின்னர் பாஜக உறுப்பினரின் இந்த இழிவான செயலை கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதியும் வெளியேறினார்.
ஜோதிமணிக்கு குவிந்த ஆதரவு: டிரெண்டிங்கில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஜோதிமணி, ”ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து, அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக, ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து, பாஜகவின் கரு நாகராஜன் என்கிற மூன்றாம் தரமான மனிதரின், தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு, களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”