கொரோனா நோய் தொற்று தொடர்பாக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தினமும் சோஷியல் மீடியா வாயிலாக சென்னை மாநகராட்சியிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகின்றனர்.
Advertisment
மேலும், தொற்று பாதித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சை உதவிகளையும் டிவிட்டர் வாயிலாக பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின் அடிப்படையில் உடனடியாக சந்தேகங்கள், தேவைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் 044 46122300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“