கொரோனா பற்றிய சந்தேகமா? – மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று தொடர்பாக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தினமும் சோஷியல் மீடியா வாயிலாக சென்னை மாநகராட்சியிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகின்றனர்.  மேலும், தொற்று பாதித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சை உதவிகளையும் டிவிட்டர் வாயிலாக பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை…

By: Published: June 10, 2020, 9:02:38 PM

கொரோனா நோய் தொற்று தொடர்பாக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தினமும் சோஷியல் மீடியா வாயிலாக சென்னை மாநகராட்சியிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகின்றனர்.


மேலும், தொற்று பாதித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சை உதவிகளையும் டிவிட்டர் வாயிலாக பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின் அடிப்படையில் உடனடியாக சந்தேகங்கள், தேவைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


மண்டலம் – எண்

திருவொற்றியூர் – 044 46556301

மணலி – 044 46556302

மாதவரம் – 044 46556303

தண்டையார்பேட்டை – 044 46556304

ராயபுரம் – 044 46556305

திரு.வி.க. நகர் – 044 46556306

அம்பத்தூர் – 044 46556307

அண்ணாநகர் – 044 46556308

தேனாம்பேட்டை – 044 46556309

கோடம்பாக்கம் – 044 46556310

வளசரவாக்கம் – 044 46556311

ஆலந்தூர் – 044 46556312

அடையாறு – 044 46556313

பெருங்குடி – 044 46556314

சோழிங்கநல்லூர் – 044 46556315

ஜெ.அன்பழகனின் இறுதிப் பயணம்; புகைப்படங்கள்

இது தவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் 044 46122300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona in tamil nadu corona doubts zonal wise numbers covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X