தமிழகத்தில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
திருவல்லிக்கேணி நிருபர் தங்கியிருந்த மேன்ஷனில் வசித்த சுமார் 50 நபர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளின் தகவலின் படி, அந்த நிருபர் இதற்கு முன்னர் COVID-19 தொற்று ஏற்பட்ட எந்த நபர்களுடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது
திருவல்லிக்கேணி நிருபர் தங்கியிருந்த மேன்ஷனில் வசித்த சுமார் 50 நபர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளின் தகவலின் படி, அந்த நிருபர் இதற்கு முன்னர் COVID-19 தொற்று ஏற்பட்ட எந்த நபர்களுடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது
2 women tests corona positive, returned from varanasi
Corona Updates in Tamil Nadu: சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர் உள்ளூர் தினசரி செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவருக்கு கொரோனா வைரஸ் குறித்த செய்தி சேகரிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருந்தது. மற்றொரு பாதிப்பட்ட நபர், தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் நபராவார். இவரது வீடு ராயபுரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது.
திருவல்லிக்கேணி நிருபர் தங்கியிருந்த மேன்ஷனில் வசித்த சுமார் 50 நபர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளின் தகவலின் படி, அந்த நிருபர் இதற்கு முன்னர் COVID-19 தொற்று ஏற்பட்ட எந்த நபர்களுடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அவர் தனது செய்தி அறிக்கைக்காக, ரிப்பன் பில்டிங் மற்றும் இதர இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார். இருப்பினும், லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் ரிப்பன் பில்டிங் செல்வதை நிறுத்திவிட்டதாகவும், மைலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு மட்டுமே சென்று கொண்டிருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தனக்கு அறிகுறிகள் இருப்பதாக நினைத்தபோது, தானாக முன்வந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ராயபுரத்தைச் சேர்ந்த இரண்டாவது பத்திரிகையாளர் ஒரு தொலைக்காட்சி சேனலில் துணை ஆசிரியராக பணியாற்றினார்.
அவரது தந்தை ஒரு போலீஸ்காரர் என்பதால், தனது குடும்பத்தினருடன் காவலர் குடியிருப்புகளில் வசித்து வந்தார். அந்த நிருபருக்கும், அவரது தந்தைக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில், நிருபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தைக்கு தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொடர்புகள் பாரதி மகளிர் கல்லூரியில் உள்ள மாதிரி சேகரிப்பு மையத்தில் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”