வடகிழக்கு இந்தியர்களும் போற்றும் சென்னை மாநகராட்சி…

தற்போது அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றாலும், இந்த நாட்களை அவர்கள் தங்களின் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. 

Corona relief work Greater Chennai Corporation helped North East people : கொரோனா நோய் தொற்று தீவிரம் அடைய துவங்கியதுமே தமிழக நகரங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் திறம்பட செயல்பட துவங்கின. பல்வேறு முக்கிய பொறுப்புகளை சிறப்பாக செய்து கொண்டு வருகிறது சென்னை மாநகராட்சி. முதலில் சென்னை மாநகராட்சி நிர்வாகிகளுக்கு நன்றி கூறிக் கொள்வோம்.

மேலும் படிக்க : கொரோனா விவகாரத்திலும் கைகொடுக்கும் புளோரென்ஸ் நைட்டிங்கேலின் மகத்தான சேவை

அனைவருக்கும் தேவையான காய்கறிகள் பருப்பு முதல் கிடைக்க ஏற்பாடு செய்தது. விழிப்புணர்வினை மேற்கொள்ள டிஜிட்டல் தளத்திலும், களத்திலும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டது, மக்கள் நடமாட்டம் முதல் மக்களின் பொது நலன் வரை அனைத்திலும் கூடுதல் கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சென்னையில் சிக்கிக் கொண்ட வடகிழக்கு இந்தியர்களுக்கு சென்னை மாநகராட்சி வழங்கியிருக்கும் சிறப்பு ஏற்பாடுகளை பாருங்கள். தன் மாநில மக்கள் என்று இல்லாமல் அனைவரின் உயிர் குறித்தும் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி என்பது புரியும்.

மேலும் படிக்க : திருமழிசையில் காய்கறி விற்பனை துவங்கியது : பாதுகாப்பு தீவிரம்

சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் வடகிழக்கு மாணவர்கள் மற்றும் மக்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தென் சென்னை பகுதி நிர்வாகம், வடகிழக்கு இந்தியா நலச் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு, லாக்டவுனில் சிக்கிக் கொண்ட வடகிழக்கு இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது.  வட கிழக்கு இந்தியர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருக்கும் சலூன்கள், ஸ்பாக்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றி வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்பு அவர்களுக்கான வேலையில்லாததால் கையில் பணம் இன்றி தவித்து வந்தனர்.

அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சென்னை கார்ப்பரேஷன் செய்து வந்தது. தற்போது அவர்களில் பலரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். அவர்கள் சென்னை மாநகராட்சி வழங்கிய சிறப்பு தங்கும் இடங்களில் வழங்கப்பட்ட வசதிகள் குறித்து எடுத்த வீடியோ தான் இது. தற்போது அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றாலும், இந்த நாட்களை அவர்கள் தங்களின் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona relief work greater chennai corporation helped north east people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com