தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 1,155
COVID-19 Chennai: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது
COVID-19 Chennai: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது
Corona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் தமிழகமும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று (ஜூன்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியானவர்களில் 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 604 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16,999 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை கொரோனா நிலவரம்
சென்னையில் இன்று கொரோனாவால் 15 பேர் பலி
இன்று புதிதாக 1,155 பேருக்கு தொற்று உறுதி
மொத்த பாதிப்பு - 22,149
சிகிச்சையில் உள்ளவர்கள் - 10,982
குணமடைந்தவர்கள் - 10,954
உயிரிழப்பு - 212
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil