Advertisment

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கொரோனா தொற்று - சென்னையில் மட்டும் 567 பாதிப்புகள்

COVID-19 Cases in Tamil Nadu: தமிழகத்தில் தற்போது குணமடைந்தவர்கள் விகிதம் 44.97 ஆக உள்ளது. மாநிலத்தில் பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, corona virus tamil nadu news, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms

Corona Virus Cases in Tamil Nadu Today Reports: தமிழகத்தில் மேலும் புதிதாக 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967-ஆக அதிகரித்துளளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.

தமிழக அரசு பத்திரிகைகள் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம்  கூறுகையில், "தமிழகத்தில் இன்று(மே.21) 776 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6282 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது குணமடைந்தவர்கள் விகிதம் 44.97 ஆக உள்ளது. மாநிலத்தில் பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 3.72 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலில் நெகட்டிவ் ஆகி வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்துள்ளது புதிய சவாலாக உள்ளது.

பிராமணர் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியர்கள்: தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ உருக்கப் பதிவு

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பாசிட்டிவாக வருவோரும் சவாலாக உள்ளனர். இந்த புதிய சவால்களால் தான் தற்போதைய அதிக பாதிப்பு எண்ணிக்கைக்கு காரணம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 567 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment