/tamil-ie/media/media_files/uploads/2020/05/a78.jpg)
corona virus, corona latest news
Corona Virus Cases in Tamil Nadu Today Reports:தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
கொரோனா வைரஸ்: அமெரிக்காவை அடுத்து சீனா கண்டுபிடித்த தடுப்பூசி
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று(மே.24) புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 39 பேர், மேற்குவங்கத்தில் - 2 பேர், டில்லி, கேரளா, கர்நாடகா, பிலிப்பைன்ஸ், துபாய், லண்டனில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,275 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன. மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,003 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 13,916 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,358 பேரும் உள்ளனர் "என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயம் காட்டிய சில மாநிலங்களில் கொரோனா வளர்ச்சி விகிதம் சரிவு
சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,989 லிருந்து 10,576 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா மாவட்டம் வாரியாக பாதிப்பு
சென்னை - 587
செங்கல்பட்டு - 46
அரியலூர் - 1
கடலூர் - 4
கள்ளக்குறிச்சி -15
காஞ்சிபுரம் - 21
தேனி - 4
திருவள்ளூர் - 34
திருவாரூர் - 2
திருச்சி - 3
விருதுநகர் - 13
தூத்துக்குடி - 11
திருவண்ணாமலை - 4
கன்னியாகுமரி - 2
மதுரை - 6
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 2
தஞ்சாவூர் - 3
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.